Vikram : விக்ரமின் வீர தீர சூரன் 2 படத்தின் மொத்த வசூல் எவ்வளவு.. ரூ.100 கோடியை நெருங்கியதா?
Veera Dheera Sooran 2 Total Collection : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2025, மார்ச் இறுதியில் வெளியான படம் வீர தீர சூரன் 2. இந்த படமானது வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில், இதுவரை வசூல் செய்த மொத்த வசூல் விவரம் குறித்து முழுமையாக பார்க்கலாம்.

இயக்குநர் எஸ்.யு. அருண் குமாரின் (S.U. Arun Kumar) முன்னணி இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் ( Chiyan Vikram) கதாநாயகனாக நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிர்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது கடந்த 2025, மார்ச் 27ம் தேதியில் மாலை காட்சிகள் முதல் ரிலீசாகியது. இந்த படத்தின் ரிலீஸில் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், முதல் நாளிலே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் மிகவும் அருமையாக அமைந்தது என்றே சொல்லலாம். மேலும் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் மிகவும் அருமையாகவே இருந்தது.
இந்த படமானது சுமார் ரூ. 55 கோடி பட்ஜெட்டில் உருவாகியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ.70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்தான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீர தீர சூரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் :
Here’s the Sneak Peek 02 Of @chiyaan’s #VeeraDheeraSooran
An #SUArunKumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu
@officialdushara @thenieswar @editor_prasanna… pic.twitter.com/6h7I3uNmKE— HR Pictures (@hr_pictures) April 7, 2025
விக்ரமின் வீர வீர சூரன் 2 படம் வெளியாகி 15 நாட்களை கடந்த நிலையில், அதை தொடர்ந்து அஜித்தின் முன்னணி நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படமானது வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்துவரும் நிலையில், வீர வீர சூரன் படமானது ஒரு சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகி வருகிறது.
நடிகர் விக்ரமின், வீர தீர சூரன் 2 படத்தில் அவருடன் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி, நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியான நிலையில், தற்போது அந்த படத்திற்குத்தான் அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது.
மேலும் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் 2 படமானது விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிராமத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இப்படம் பல பிரச்சனைகளை கடந்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.