சின்னத்திரை டூ வெள்ளித்திரை… வாய்ஸ் ஓவர் ஆட்டிஸ்ட் டூ மாஸ் ஹீரோ… சியான் விக்ரமிற்கு ஹேப்பி பர்த்டே
Actor Vikram Celebrate Birthday: சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம் அவருக்கு கம்பேக்காக அமைந்து. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

நடிகர் விக்ரம் (Vikram) வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பாக சின்னத்திரையில் இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான கலாட்டா குடும்பம் என்ற சீரியலில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் பல நடிகர்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாகவும் நடிகர் விக்ரம் பணியாற்றியுள்ளார். பின்பு 1990-ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்த நடிகர் விக்ரம் இயக்குநர் பாலா (Bala) இயக்கத்தில் வெளியான சேது படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் சினிமா வாழ்க்கை வேறு தளத்திற்கு சென்றது என்றே கூறலாம்.
சேது படம் நடிகர் விக்ரம் நடிப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை திரைத் துறையில் உள்ளவர்களின் மனதில் நங்கூரமாக பதிந்தது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் தரணி இயக்கத்தில் வெளியான தில், இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி, இயக்குநர் தரணி இயக்கத்தில் வெளியான தூள், இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
சேது படத்தில் தனது நடிப்பு திறமையை உலகம் அறிய செய்த விக்ரமிற்கு அடுத்த வாய்ப்பாக அமைந்த படம் காசி. இயக்குநர் வினயன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் கண் பார்வையற்றவராக நடித்திருப்பார். மாற்றுத்திறனாளியாக நடித்த நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றார்.
சேது படத்திற்கு பிறகு காசி படத்திலும் மீண்டும் தனது நடிப்பு திறைமையை அனைவருக்கும் காட்டினார் நடிகர் விக்ரம். அதனைத் தொடந்து இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் போட்டிப் போட்டு நடித்தனர். சேது படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்திய விக்ரம் பிதாமகன் படத்திலும் வெட்டியானாக நடிப்பில் கலக்கியிருப்பார். ஒரு வார்த்தை கூட பேசாமல் படம் முழுக்க தனது நடிப்பு மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் தேவயானி, லைலா, கிரண், சினேகா, ஜோதிகா, த்ரிஷா, சதா, அசின், ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய், சமந்தா, அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சிம்ரன் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் கூட்டணி வைத்து இவரது நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களுக் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களான பாலா, மணிரத்னம், சங்கர், விஜய், லிங்குசாமி, ஹரி, தரணி என பலருடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். தொடர்ந்து தனது வித்யாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த நடிகர் விக்ரமிற்கு ஹேப்பி பர்த்டே.