Beast : 3 வருடத்தை நிறைவு செய்த தளபதி விஜய்யின் பீஸ்ட்..! ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு!
Vijay Beast Movie : கோலிவுட் மாஸ் நாயகன் தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படமானது, இன்றுடன் ரிலீசாகி 3 வருடங்களை நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த தினத்தை கொண்டாடும் விதத்தில் படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து, பிரம்மாண்ட கதாநாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய் ( Thalapathy Vijay). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கிரெடெஸ்ட் ஆல் டைம். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பங்கம் செய்தது. இந்த படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹச். வினோத்தின் இயக்கத்தில் ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியிருந்தார். இந்த படத்தின் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து, மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. மேலும் தற்போது இப்படமானது கடந்த 2022, ஏப்ரல் 13ம் தேதியில் வெளியாகியது. இன்றோடு படம் வெளியாகி மூன்று வருடங்கள் நிறைவாகியுள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் படக்குழு வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ :
Hey Veera Raghavan Army, this one is for you!🔥 Celebrating 3 years of #Beast❤🔥😎#3YearsofBeast #Beast pic.twitter.com/WgsZMNfEbD
— Sun Pictures (@sunpictures) April 13, 2025
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் சீக்ரெட் ராணுவ ஏஜெண்டாக நடித்திருந்தார். ஒரு வணிக வளாகத்தில் நடக்கும் ஹைஜாக்கிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் மற்றும் தீவிரவாதிகளை எவ்வாறு கண்டுபிடிகிறார் என்பதுதான் இந்த படத்தின் பிரதான கதைகளமாக இருந்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியது. அதிலும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடும் “ஹலமாத்தி ஹாபி போ” பாடல் தற்போது வரையிலும் ரசிகர்களிடம் வைப் பாடலாக இருந்து வருகிறது.
இந்த படத்தின் கதைக்களம் காமெடி, ஆக்ஷ்ன், மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்த படமானது சுமார் ரூ. 150 கோடி பொருட்செலவில் வெளியாகியிருந்தது. மேலும் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ மற்றும் கோட் என அடுத்தடுத்த படங்களில் நடித்தும் ஹிட் கொடுத்தார். இப்படங்களை தொடர்ந்து தனது நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் வரும் 2026, ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.