ரிலீஸ் தேதியை லாக் செய்தது நடிகர் விஜய் சேதுபதியின் ’ஏஸ்’ படக்குழு…!

Vijay Sethupathys ACE Movie: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏஸ்' திரைப்படம் மே மாதம் 23-ம் தேதி 2025 ஆண்டு அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சனிக்கிழமை 19-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு அறிவித்துள்ளனர்.

ரிலீஸ் தேதியை லாக் செய்தது நடிகர் விஜய் சேதுபதியின் ’ஏஸ்’ படக்குழு...!

ஏஸ்

Updated On: 

20 Apr 2025 07:56 AM

1996-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) பல பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர்கள் தனுஷ், சசிக்குமார், சிபி சத்யராஜ், கார்த்திக், விஷ்ணு விஷால் ஆகியோரின் படங்களில் பின்னணி கதாப்பாத்திரத்திலும், நாயகன்களின் நண்பராகவும் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று (Thenmerku Paruvakaatru) படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு கோலிவுட் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படத்தில் நாயகனாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் விஜய் சேதுபதி.

தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் கோலிவுட்டில் இவரை நாயகனாக நிலை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

பல அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் வெற்றியை கொடுத்தாலும் பல படங்கள் படு தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விஜய் சேதுபதி ”வாய்ப்பு என்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

அதனால் நான் பல அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் நடித்தேன். அதில் சிலரின் குதிரைகள் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைந்தது. பல குதிரைகள் எங்கு போனது என்றே தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நாயகனாக மட்டும் நடிக்காமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். அதன்படி ரஜினியின் பேட்ட, கமல் ஹாசனின் விக்ரம், விஜயின் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லனை பிடிக்காது என்றாலும் இந்த வில்லனை அனைவரும் கொண்டாடவே செய்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக நடித்து வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெய்ன் மற்றும் ஏஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் ஏஸ் படத்தை இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். படம் மே மாதம் 23-ம் தேதி 2025 ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ். அவினாஷ் மற்றும் பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 7Cs என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.