Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay : ’ஜன நாயகன்’ கெட்டப்பில் ரசிகர்களை சந்தித்த விஜய்… தீயாய் பரவும் வீடியோ!

Actor Vijay Meets Fans : நடிகர் விஜய்யின் முன்னணி நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ஜன நாயகன். விஜய்யின் 69வது திரைப்படமான இந்த படத்தை இயக்குநர் ஹச். வினோத் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிர்கர்களை சந்தித்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay : ’ஜன நாயகன்’ கெட்டப்பில் ரசிகர்களை சந்தித்த விஜய்… தீயாய் பரவும் வீடியோ!
நடிகர் தளபதி விஜய் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 14 Apr 2025 07:55 AM

கோலிவுட் சினிமாவின் தூணாக இருந்து வருபவர் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் முன்னணி நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை (Chennai) மதுரவாயில் பகுதியில் நடந்துவரும் நிலையில், ஜன நாயகன் படத்தின் கெட்டப்பில் ரசிகர்களை விஜய் சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற சட்டையுடன், கருப்பு கண்ணாடி அணிந்தபடி ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் கையசைத்துள்ளார். தற்போது ஜன நாயகன் கெட்டப்பில் அவர் இருக்கும் வீடியோ இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் விஜய்யின் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் விசில் மற்றும் கோஷங்கள் எழுப்பி விஜய்யைக் கொண்டாடுகின்றனர்.

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமான ஜன நாயகன் திரைப்படத்தை, இயக்குநர் ஹச். வினோத் இயக்கி வருகிறார். இவர் இறுதியாக நடிகர் அஜித்தின் துணிவு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஜய்யின் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷ்ன் நிறுவனமானது தயாரித்து வருகிறது.

நடிகர் விஜய்யின் வைரல் வீடியோ :

நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான, ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், தற்போதுவரை 65% சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஹச். வினோத் இயக்கும் இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் ஸ்ருதி ஹாசன், பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார், நரேன், பிரகாஷ் ராஜ், டீஜெய் அருணாச்சலம், மமிதா பைஜூ ஏபல் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர் மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக அனிமல் திரைப்பட பிரபல நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். இவர் தமிழில் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மிக பிரம்மாண்ட கதைக்களத்துடன் மற்றும் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படமானது வரும் 2025, ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறதாம், மேலும் ஓடிடியில் மட்டும்தான் இந்தி மொழியில் வெளியாகும் நேரும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படமானது வெளியாகி கோலிவுட் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்திடாத சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?
செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?...
கோடையில் தொல்லை தரும் தலை அரிப்பு.. ஈசியா சரிசெய்ய இலை டிப்ஸ்!
கோடையில் தொல்லை தரும் தலை அரிப்பு.. ஈசியா சரிசெய்ய இலை டிப்ஸ்!...
அப்படி நடித்திருந்தால் கோடி பணம்.. ஆனால் நோ சொன்னேன்- சமந்தா
அப்படி நடித்திருந்தால் கோடி பணம்.. ஆனால் நோ சொன்னேன்- சமந்தா...
10 வருடங்களுக்கு பின் மீண்டும்... எஸ்.ஜே.சூர்யா சொன்ன குட் நியூஸ்
10 வருடங்களுக்கு பின் மீண்டும்... எஸ்.ஜே.சூர்யா சொன்ன குட் நியூஸ்...
கேரள முதல்வருடன் சந்திப்பு.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு!
கேரள முதல்வருடன் சந்திப்பு.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு!...
உங்களுக்கு 40 வயதா? வேலை பறிபோகும் ஆபத்து!
உங்களுக்கு 40 வயதா? வேலை பறிபோகும் ஆபத்து!...
நிதி நெருக்கடி! வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்!
நிதி நெருக்கடி! வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்!...
இந்திய நீதி அறிக்கை 2025.. முன்னேறிய தென்மாநிலங்கள்!
இந்திய நீதி அறிக்கை 2025.. முன்னேறிய தென்மாநிலங்கள்!...
குபேரா முதல் பாடல்.. அடுத்தடுத்த அப்டேட்.. தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி
குபேரா முதல் பாடல்.. அடுத்தடுத்த அப்டேட்.. தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி...
ஆய்வகத்தில் உருவாகும் பற்கள் - இனி பல் இழப்புக்கு நிரந்தர தீர்வு!
ஆய்வகத்தில் உருவாகும் பற்கள் - இனி பல் இழப்புக்கு நிரந்தர தீர்வு!...
சுவாமி ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் தலைமைத்துவம் ஃபார்முலா
சுவாமி ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் தலைமைத்துவம் ஃபார்முலா...