Ghilli : விஜய் – திரிஷாவின் மாஸ் காம்போ… ரிலீசாகி 21 வருடத்தைக் கடந்த கில்லி திரைப்படம்!
21 Years Of Ghilli Movie : தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகனாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருப்பது கில்லி. கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படம், ரிலீசாகி 21 வருடத்தைக் கடந்துள்ளது. ரசிகர்களில் ஃபேவரைட் படத்தைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகர் விஜய்யின் (Vijay) முன்னணி நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி (Ghilli). இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் தரணி (Dharani) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2003ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்கடு (Okkadu) என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். இந்த படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கில்லி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். காதல், ஆக்ஷ்ன், காமெடி மற்றும் கபடி என முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த படமானது அமைந்திருந்தது. இந்த படமானது கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல், 17ம் தேதியில் வெளியாகியது. விஜய்யின் நடிப்பில் வெளியாகி இன்று வரையிலும் பலராலும் ரசிக்கப்பட்டுவரும் படத்தில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்.
சுமார் 21 வருடங்களுக்கும் முன் ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படமானது, மொத்தமாகத் திரையரங்குகளில் மட்டுமே ரூ. 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் கூட திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின் 21 வருட நிறையவை கொண்டாடும் வகையில் சர்தார் 2 படப்பிடிப்பில் இயக்குநர் தரணி இருக்கும் வீடியோவை, இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ரத்ன குமாரின் பதிவு :
#21YearsofGhilli. Love you sir. Thank you for #Ghilli. 💥💥
With Director Dharani sir from the sets of #Sardar2.
On seeing the lights in the background. I said it reminded Kokara kokarako song Light house. We spoke about Ghilli for a while. And felt like vibing for it one more… pic.twitter.com/OoJbmhYkvA
— Rathna kumar (@MrRathna) April 17, 2025
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான பிரபல படமாகக் கில்லி தற்போது வரையிலும் இருந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு ரசிக்கப்பட்டதோ, அதை போல் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருந்த முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரமும் மிகவும் பிரபலமானது. திரிஷா மற்றும் முத்துப்பாண்டி இருக்கும் கதாபாத்திரம் இன்றுவரையிலும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் இவர்களுடன் நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி , தாமு , மயில்சாமி , ஜானகி சபேஷ் , நான்சி ஜெனிஃபர், பொன்னம்பலம் மற்றும் நாகேந்திர பிரசாத் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024, ஆண்டு கில்லி படத்தில் 20வது வருட நிறைவை முன்னிட்டு, 4கே தரத்துடன் இந்த படமானது உலகமெங்கும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த ரீ ரிலீஸ் திரைப்படத்தையும் பல ரசிகர்களை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும் இந்த 2025ம் ஆண்டுடன் இந்த கில்லி படமானது வெளியாகி சுமார் 21 வருடத்தை கடந்த நிலையில், ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் எக்ஸ் தலத்தில் #21yearsofGhilli என ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.