என்ன வாழ வச்சது அவருதான்… நடிகர் ராஜ்கிரண் குறித்து நடிகர் வடிவேலு நெகிழ்ச்சிப் பேச்சு

Actor Vadivelu about Rajkiran: காமெடி உலகில் அரசனாக இருந்து வந்த நடிகர் வடிவேலு, இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு வெளியான தெனாலிராமன், எலி ஆகிய பாங்களிலும் நாயகனாக நடித்தார்.

என்ன வாழ வச்சது அவருதான்... நடிகர் ராஜ்கிரண் குறித்து நடிகர் வடிவேலு நெகிழ்ச்சிப் பேச்சு

வடிவேலு மற்றும் ராஜ்கிரண்

Published: 

23 Apr 2025 18:16 PM

தமிழி சினிமாவில் காமெடி கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் 1988-ம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு உலகின் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ் கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார் வடிவேலு. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் ஆத்தா உன் கோயிலிலே, சிங்கார வேலன், சின்ன கவுண்டர், தேவர் மகன் என பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். கவுண்டமணி செந்தில் காம்போ ஒருபுரம் ஹிட் அடித்துக் கொண்டிருந்த வேலையில் அறிமுகம் ஆன கத்துக்குட்டியாக காமெடியில் கலக்கி வந்தார் வடிவேலு.

பல படங்களில் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார். இந்த நிலையில் கவுண்டமணி செந்தில் காம்போ முடிந்து வடிவேலு VS  விவேக் என்ற நிலை கோலிவுட்டில் மாறியது. இதில் வடிவேலு மற்றும் விவேக்கிற்கு இடையே காமெடியில் யார் கலக்குவார்கள் என்பது போன்ற போட்டியே இருந்தது.

இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கான இடத்தை மிகவும் சீக்கிரமாகவே பிடித்துக்கொண்டார் வடிவேலு. அது மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களிலும் அவர் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவின் கால் சீட்டிற்காக தயாரிப்பாளர்களும் படக்குழுவினரும் காத்திருக்கும் நிலை வந்தது.

இன்றளவும் பல பாங்களிலும் மீம்ஸ்களிலும் ராஜாவாக இருக்கிறார் வடிவேலு. இவரது படங்களில் ரெஃபரன்ஸ்களை வைத்தே சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் உலா வருகின்றது. திரைத் துறையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் காரணமாக நடிகர் வடிவேலு சுமார் 5 வருடங்களாக சினிமாவில் இருந்து நடிக்காமல் விலகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார் வடிவேலு.

இதில் உதயநிதியின் தந்தையாக மாமன்னனாக நடித்தார் வடிவேலு. காமெடியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்தது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வடிவேலுவிற்கு கம்பேக் என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து தற்போது கேங்கர்ஸ் மற்றும் மாரீசன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் வடிவேலு நடிகர் ராஜ் கிரண் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “கிட்டதட்ட 4 வருஷம் ராஜ் கிரண் அவருடையா ஆபிசிலேயே வைத்து என்ன வாழ வைத்தது அவர்தான். மேலும் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க உதவியது ராஜ் கிரண் தான் என்றும் அவர் பேசியது வைரலாகி வருகின்றது.