ரஜினிகாந்தின் கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
Actor Upendra Shares Update For Coolie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் படமான கூலியில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதுகுறித்து ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடிகர் உபேந்திரா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், உபேந்திரா
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முன்னதாக டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் கன்னட நடிகர் உபேந்திர ராவ் (Upendra Rao) ஆகியோர் கூட்டணியில் இணைந்திருப்பது முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இப்போது, கூலி படத்தில் நடிகர் அமீர் கான் இணைந்துள்ளதாக அப்டேட் வெளியியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் சிவகுமார் மற்றும் ராஜ் பி ஷெட்டியுடன் தனது அடுத்த படமான 45 ஐ விளம்பரப்படுத்தும் நிகழ்வின் போது நடிகர் உபேந்திரா ராவ் இந்த சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கூலி படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து செய்தியாளர்கள் உபேந்திராவிடம் கேட்ட போது சூப்ப்ரான அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
நடிகர் உபேந்திரா பேசியதாவது, “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொன்னபோது நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. நான் சொன்னதெல்லாம், நான் படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தால் போதும். ஏனென்றால் நான் ஏகலைவன் என்றால், அவர் என் துரோணாச்சாரியார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அனைவருக்கும் பொழுதுபோக்கு அளித்த ரஜினிகாந்த் எனக்கு ஞானோதயத்தை அளித்தார். ரஜினி சார் அப்படிப்பட்டவர், அவருடன் பணியாற்றியதில் நான் பாக்கியசாலி என்று உபேந்திரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் அமீர் கானுடன் இணைந்து நடித்தீர்களா என்று கேட்டபோது, ஆமாம், எங்களுக்குள் ஒன்றாக காட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் இதுவரை கண்டிராத சிறப்பான தோற்றத்தில் நடிக்கிறார். நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் உபேந்திர ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அதே நேரத்தில் நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் இதில் நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதையின் ஒரு முக்கிய திருப்புமுனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதற்கிடையில் நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாட உள்ளார். இதுகுறித்து முன்னதாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் கூலி படம் ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.