சிறப்பான தரமான சம்பவம் ரெடி… மாஸாக வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெய்லர்

Retro Movie Trailer: நடிகர் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக வெளியான கங்குவா படம் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் உடன் தனது 44 வது படத்திற்காக ஒப்பந்தமானார் சூர்யா. ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பான தரமான சம்பவம் ரெடி... மாஸாக வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெய்லர்

ரெட்ரோ

Published: 

18 Apr 2025 19:16 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் 44-வது படமாக உருவாகியுள்ளது ரெட்ரோ (Retro). இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு கடந்த 2024-ம் ஆண்டு இறுதியில் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காத்துள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் டீசரை டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்தப் டீசரைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். காரணம் இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே ஆகும்.

படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படம் நிச்சயமாக சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவாக கண்ணாடிப் பூவே பாடலை வெளியிட்டது படக்குழு.

முன்னதாக சூர்யா நடிப்பில் வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து வெளியான அஞ்சலை பாடல் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அதே போல இந்தப் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வெளியான சில நாட்களிலேயே பாடல் பல மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளியான கனிமா பாடல் சில்லுனு ஒரு காதல் படத்தில் வருக் கல்யாணப் பாடல் போல இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றாலே கனிமா பாடலுக்கு ரசிகர்கள் ரீல்ஸ் செய்து போட்ட வீடியோதான் அதிகம் வருகின்றது. அந்த அளவிற்கு ஒரு வைபாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படத்தின் அப்டேகளால் ரசிகரக்ள் உற்சாகத்தில் உள்ள நிலையில் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா ரெட்ரோ ஸ்டைலில் மாஸாக காட்சியளிக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ட்ரெய்லரில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதல், சிரிப்பு, போர் என படம் வேற லெவல் லவ் ஆக்‌ஷன் ட்ராமாவாக இருக்கும் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.