Retro : சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது ஆரம்பம்? ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் அப்டேட் இதோ!
Retro Movie Ticket Pre-Booking : நடிகர் சூர்யா மற்றும் நடிகை பூஜா ஹெக்டேவின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தைத் தமிழின் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த இப்படமானது திரையரங்குகளில் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதி மாலை 4 மணி முதல் சிறப்பாக ஆரம்பமாக உள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் ரெட்ரோ
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் கங்குவா படத்தைத் தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro) . இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது சுமார் ரூ. 120 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் நாயகனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (pooja Hegde) நடித்துள்ளார். கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் இந்த படமானது பிரம்மாண்டமாக உருவாகிவந்தது.
சூர்யாவின் இந்த ரெட்ரோ படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ரெட்ரோ படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில், மாலை 4 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரெட்ரோ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
#Retro ⚡ https://t.co/2bBJO48UyL
— jack 🧢’ ONEPIECE BACK 🏴☠️ (@jackiscrazyB) April 23, 2025
சூர்யாவின் கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக இந்த ரெட்ரோ படம் இருந்து வருகிறது. சூர்யாவின் 44வது திரைப்படமான ரெட்ரோவிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
இந்த திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படம் முழுக்க காதல் படம் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகர்கள் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுவாசிகா, பிரேம் குமார், ராஜ் மரியான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக நடிகை ஸ்ரேயா சரண் இந்த படத்தில் சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார்.
மேலும் சூர்யா இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா 45 என்ற தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.