Retro: கனிமா வைப் இன்னும் போகல.. ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!

Retro Movie Next Single Update : தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் ஆழ்த்த இடத்தை பிடித்தவர் சூர்யா. கங்குவா படத்தில் தோல்விக்குப் பின் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து 3வது பாடல் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Retro: கனிமா வைப் இன்னும் போகல.. ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!

ரெட்ரோ திரைப்படம்

Published: 

09 Apr 2025 23:00 PM

கோலிவுட் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் (Karthik Subbaraj)  இயக்கத்தில், தற்போது ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya)  முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  நடித்துள்ளார். ரெட்ரோ படமானது காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷ்ன் போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் 44வது இந்த படத்தை, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் சூர்யா- ஜோதிகாவின் 2 டி எண்டெர்டைமென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில், இப்படத்திலிருந்து வெளியான கனிமா மற்றும் கண்ணாடி பூவே போன்ற பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த இரு பாடல்களைத் தொடர்ந்து 3வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். இரண்டு பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து 3வது பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட அறிவிப்பு :

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படத்தை இயக்கி வந்தார். இந்த படமானது முற்றிலும் காதல் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலே ஆரம்பமான நிலையில், அதே ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவைத் தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் பல தகவல்களும் வெளியாகி இப்படத்தின் மீதான கவனத்தை அதிகப்படுத்தி வருகிறது. இந்த படத்தில் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

சூர்யா நியூ திரைப்படம் :

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, சூர்யா 45 என்ற தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த படமும் தற்போது இறுதிக்கட்டத்தில் நெருங்கிய நிலையில், சூர்யா தெலுங்கில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.