Retro : சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

Retro Movie Audio Launch Update : நடிகர் சூர்யாவின் நடிப்பில் கங்குவா படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். தற்போது ரிலிஸிற்கு தயாராகிவரும் இப்படத்திலிருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது என்பதை பற்றிப் பார்க்கலாம்.

Retro : சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

ரெட்ரோ திரைப்படம்

Published: 

08 Apr 2025 21:00 PM

கோலிவுட் சினிமாவில் பேமஸ் ஹீரோவாக இருந்து வருபவர் சூர்யா (Suriya) .  இவரின் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ரெட்ரோ (Retro). சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கியுள்ளார். இந்தப் படத்தைச் சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் மாஸ் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான “கண்ணாடி பூவே மற்றும் கனிமா” பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டிலிருந்து வருகிறது.

இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளானது காமிக் வடிவில் வெளியாகி வருகிறது. இதுவரை சுமார் 9 பாகங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக் வடிவில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திலிருந்து புதிய தகவலானது வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளதாக இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து படக்குழு அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் காமிக் காட்சி பதிவு :

ஆடியோ வெளியீட்டு விழா தேதி

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில், சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 44வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் இவர் நடித்த 3வது திரைப்படமாகும். இப்படத்தை அடுத்த அவர் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர், ஜெயராம், சுஜித் ஷங்கர், ஜோஜு ஜார்ஜ், பிரேம் குமார், நந்திதா டாஸ், ஜார்ஜ் மரியான், உதை மகேஷ் எனப் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் நேரு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படமானது தமிழில் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் பாடமானது பான் இந்திய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.