லக்கி பாஸ்கர் பட இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த சூர்யா – வைரலாகும் வீடியோ!
Actor Suriya New Movie update: நடிகர் சூர்யா தற்போது தனது 44-வது படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சூர்யா தனது அடுத்தப் படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ரெட்ரோ (Retro). இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். காதல் மற்றும் ஆக்ஷனை மையமாக வைத்து உருவான இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு எதற்கும் துணிந்தவன், கங்குவா என தொடர்ந்து படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. சூர்யாவின் ரசிகர்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில் ரெட்ரோ படத்தின் மீது அவர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் நடிகர் சூர்யாவிற்கு கம்பேக்காக இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி ஆகியோருடன் இணைந்து தனது அடுத்த தமிழ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த தனது வரவிருக்கும் திரைப்படமான ரெட்ரோவின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசிய சூர்யா, “அழகான திறமையுடன்” இது ஒரு “அழகான கூட்டணி” என்றும், படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யா பேசிய வீடியோ:
“My next film will be with Sitara Entertainment directed by VenkiAtluri🎥. It will be a direct Tamil film🤞. We are starting shooting from May onwards in Hyderabad🤝. It will be a beautiful journey. We need all your love♥️♥️”
– #Suriya at #Retro event pic.twitter.com/YHQiDwcQhp— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2025
இந்த செய்தியை உறுதிப்படுத்திய சூர்யா, இதை இப்போது நான் அறிவிக்க வேண்டும். நான் அல்லு அரவிந்த் காருடன் தொடங்க வேண்டியிருந்தது, முழு பயணமும் அவரிடமிருந்து தொடங்கியது. அவரது ஆசீர்வாதத்துடன், நீங்கள் இந்த அறிவிப்புக்காகக் காத்திருந்தீர்கள், நாங்கள் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், வம்சி மற்றும் என் அன்பு சகோதரர் வெங்கியுடன் இங்கே இணைந்திருக்கிறோம்.
அவர் மேலும் கூறினார், இது எனது அடுத்த படமாக இருக்கும். நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்குப் பிறகு கேட்டுக்கொண்டிருப்பது போல, அழகான கூட்டணி மற்றும் அழகான திறமையுடன். இயக்குநர் வெங்கியுடன் எனது அடுத்த தமிழ் படத்தில் நடிக்க உள்ளேன். நான் இங்கே அழகான ஹைதராபாத்தில் நிறைய நேரம் செலவிடுவேன். மே முதல், எங்கள் அடுத்த படத்தைத் தொடங்குவோம். உங்கள் அனைவரின் அன்பும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை. இது ஒரு அழகான பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.