Suriya : எப்போதும் அதை விட்டுவிடாதீர்கள்.. வாழ்க்கையில் அது மூன்று முறைதான் கிடைக்கும்.. நடிகர் சூர்யா!

Actor Suriyas Advice To Fans : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கலக்கி வருபவர் சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது ரிலீசிற்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், அதில் நடிகர் சூர்யா கொடுத்த அட்வைஸ் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

Suriya : எப்போதும் அதை விட்டுவிடாதீர்கள்.. வாழ்க்கையில் அது மூன்று முறைதான் கிடைக்கும்.. நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா

Published: 

20 Apr 2025 17:03 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் இறுதியாக கங்குவா  (Kanguva) வெளியானது. சிறுத்தை சிவாவின் (Shiva)  முன்னணி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படுதோல்வி அடைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்து வந்த படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை கோலிவுட் ஃபேமஸ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். தொடர் தோல்விக்கு பின் சூர்யாவின் கம்பேக் திரைப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா முழுக்க ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனமும், கார்த்தி சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், அதில் ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சூர்யா “கிடைக்கும் வாய்ப்புகளை எப்போதும் விட்டுவிடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

ரெட்ரோ படத்தின் ட்ரெய்லர் பதிவு :

நடிகர் சூர்யா கொடுத்த அட்வைஸ் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா “ஒருவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை விட்டிவிடாதீர்கள். சாதாரனமாக ஒருவருக்கு வாழ்க்கையில் மூன்று முறைதான் வாய்ப்புகள் கிடைக்கும், அதை ஒருபோதும் தவறவிடாதிறீர்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் பொழுது பலரும் என்னிடம் கேட்ட கேள்வி நல்ல இருக்கீங்களா என்றுதான், உங்கள் அன்பு எப்போதும் இருந்தால் நான் நன்றாகத்தான் இருப்பேன். நமது வாழ்க்கையை நம்புங்கள், வரும் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்.

இந்த ரெட்ரோ திரைப்படத்தில் நானும், நடிகை பூஜா ஹெக்டேவும் வாழ்க்கையின் நோக்கத்தை பற்றியே பேசியிருக்கிறோம். சாதாரணமாக வாழ்க்கையில் ஒருவொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. எனது முதன்மை நோக்கம் அகரம்தான். நான் ஒரு கதாநாயகனாக இருந்ததை விட அகரம் பவுண்டேஷனை பலரிடமும் கொண்டு சென்றதை நான் மிகவும் பெரிய விஷயமாக நினைக்கிறன். இதுவரைக்கும் நாங்கள் சுமார் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறோம். இதற்கு காரணமான அகரம் அமைப்பினருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

ரெட்ரோ :

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சுமார் 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்துடன், நடிகர் நானியின் ஹிட் 3 படமும் மோதுகிறது. மேலும் கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பின் இந்த படம் கண்டிப்பாக சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.