Suriya: படத்திற்காக மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறேன்.. மற்றபடி யாரும் புகைப்பிடிக்கவேண்டாம்.. நடிகர் சூர்யா பேச்சு!
Retro Movie : நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படமானது கேங்ஸ்டர் கதைக்களத்துடன் அருமையாகத் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹார்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய சூர்யா சினிமாவுக்காக மட்டும்தான் நான் புகைபிடிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் முதல் பல்வேறு பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X). இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் ரெட்ரோ (Retro) படத்தை இயக்க தொடங்கினார். நடிகர் சூர்யா கங்குவா படத்தைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்து வந்தார். சூர்யாவின் இந்த ரெட்ரோ படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில், அதை தொடர்ந்து ரிலீசிற்கு தயாராகி வந்தது.
ரெட்ரோ படம் வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரிலீஸை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் , சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா ரெட்ரோ படத்தில் புகைப்பிடித்துள்ளது குறித்துப் பேசியுள்ளார். “அது வெறும் படத்திற்காக மட்டும்தான். சிகிரெட்டை நிஜவாழ்க்கையில் அதை தொட்டால் விடமுடியாது. ஒரு முறைதானே என்று ஆரம்பமாகும் பின் அதை விட முடியாது. அதனால் புகைப்பிடிப்தை விட்டுவிடுங்கள்” என்று அவர் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Get your tickets to experience #LoveLaughterWar at your nearest cinemas 💥#Retro bookings open now
🎟️ https://t.co/zLoKNZJ7if#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/oBtQxVzG54— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 28, 2025
சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படம் வின்டேஜ் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த ரெட்ரோ திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த்தை மனதில் வைத்து எழுதியதாகவும், பின் நடிகர் சூர்யாவிற்கு இந்த கதை அருமையாக இருக்கும் என்று அவரிடம் கூறியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார்.
ரெட்ரோ படத்தில் சூர்யாவுடன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, சுவாசிகா, ஜார்ஜ் மரியான் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகை ஷ்ரேயா சரண் சிறப்பும் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025, மே 2ம் தேதியில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள போன்ற மொழிகளில் வெளியாகிறது.
கங்குவாவின் தோல்விக்குப் பின் இந்த படமானது மிகவும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகிவருகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என சிறப்பாக இந்த ரெட்ரோ படமானது ரிலீசிற்கு தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.