Soori: சூரியின் நடிப்பில் உருவாகும் அடுத்தப்படம்.. இயக்கப்போவது யார் தெரியுமா?
Actor Soori Next Movie Update : இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சூரி. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது மாமன் படத்தில் நடித்துவரும் இவரின், அடுத்த புதிய படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1 (Viduthalai part 1)படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி (Soori) படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இனிவரும் படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அவர் கூறியிருந்தார். தற்போது இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கத்தில் மாமன் (Maaman) என்ற படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ராஜ் கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா எனப் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரின் நடிப்பில் அடுத்து உருவாகும் புதிய படத்தினை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படத்தைவெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார். சூரியின் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இந்த புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரானது நாளை 2025, ஏப்ரல் 18ம் தேதியில் படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூரியின் புதிய படத்தின் அறிவிப்பு ;
Gear up for the new game, new arena 💪🔥
Soori’s Next Title Look from Tomorrow 11.30 am ❤️🔥#RS13 #SoorisNext@sooriofficial @elredkumar #VetriMaaran @MathiMaaran @gvprakash @PeterHeinOffl #Azar @srkathiir @KiranDrk@pradeepERagav @magesh_ggg @dineshmoffl @mani_rsinfo… pic.twitter.com/bH2Eu0q6DL— RS Infotainment (@rsinfotainment) April 17, 2025
கோலிவுட் சினிமாவில் ஆரம்ப படங்களில் அங்கீகரிக்காத கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரி. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடியனாக களமிறங்கினார். தமிழில் கவுண்டமணி செந்தில் நடிகர்களுக்குப் பின், சூரி, சிவகார்த்திகேயன் என இவர்கள் இருவரின் கூட்டணி படங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகக் களமிறங்கினார் சூரி.
அதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை பார்ட் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு கருடன் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விலங்கு வெப் தொடரை இயக்கிய, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தினை தொடர்ந்து இயக்குநர் எல்ரெட் குமாரின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை 2025, ஏப்ரல் 18ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.