Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சந்தானத்துடன் நேரடியாக மோதும் சூரி… வெளியானது மாமன் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

Maaman Movie Release Update: களவாணி, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம், வேலாயுதம், போராளி, மனம் கொத்திப் பறவை என தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். மனக் கொத்திப் பறவைப் படத்திற்கு பிறகு நடிகர் சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

சந்தானத்துடன் நேரடியாக மோதும் சூரி… வெளியானது மாமன் படத்தின் ரிலீஸ் அப்டேட்!
மாமன்Image Source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2025 07:36 AM

நடிகர் சூரி (Soori) நாயகனாகவும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி (Aishwarya Lekshmi) நாயகியாகவும் நடிக்கும் மாமன் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 1997-ம் ஆண்டு முதல் சினிமாவில் சிறிய சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய சூரி சுமார் 2002-ம் ஆண்டு வரை பெயரிடப்படாத பல கேரக்டர்களில்களில் தமிழ் படங்களில் வந்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து 2003-ம் ஆண்டு வெளியான வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள கதாப்பாத்திரத்தின் அடியாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றிய நடிகர் சூரி கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார். இந்தப் படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வெளியான  படம் விடுதலை. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் சூரி. தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சூரி இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காட்சி அளித்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பையும் பொற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தை கைவிட்டுவிட்டு நாயகனாக நடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து கருடண் படத்திலும் சூரி நாயகனாக நடித்தார். இதில் சசிக்குமார் மற்றும் உன்னி முகுந்த் இருவரும் இரண்டாம் நாயகர்களாக நடித்தது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இறுதியாக இவரது நடிப்பில் விடுதலை பாகம் 2 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூரி. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சுவாசிகா, ராஜ்கிரன் என பலர் நடித்துள்ளனர்.

இதில் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்ய லக்‌ஷ்மி நடித்துள்ள நிலையில் அவரது தங்கையாக நடிகை சுவாசிகா நடித்துள்ளார். தாய் மாமன் பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக விலங்கு என்ற சூப்பர் ஹிட் சீரிஸை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நேரடியாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துடன் மோத உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!...
தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!...
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?...
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !...
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!...
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?...
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!...
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!...
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...