Soori : சூரியின் மாமன் மூவி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அதிரடி வீடியோ!
Maaman Movie Making Video : தமிழில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர் சூரி. பின் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கிவந்தார். இவரின் முன்னணி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் மாமன். இந்த படமானது ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், படக்குழு இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சூரியின் மாமன்
இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) விடுதலை பாகம் 1 (Viduthalai 1) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சூரி (Soori). இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன், பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். மேலும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் கூட்டணி மிகவும் அருமையாக இருக்கும். அதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தனியாகவும், சூரி தனியாகவும் வெவ்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாமன் (Maaman). இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன் நடிகர் விமல் நடித்திருந்த விலங்கு என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சூரி முன்னணி கதாநாயகனாக நடித்துள்ள மாமன் படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படக்குழு இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. குடும்பம் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.
மாமன் படக்குழு வெளியிட்ட வீடியோ :
The laughs, the feels, the fun — @soorimuthuchamy’s #Maaman is coming to charm your whole family! Making glimpse is here. In theatres May 16! 🎬✨#MaamanFromMay16
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1 _ #RajKiran @AishuL… pic.twitter.com/dxVTommNbD— Think Music (@thinkmusicindia) April 22, 2025
நடிகர் சூரி விடுதலை, கருடன் போன்ற படங்களை தொடர்ந்து மாமன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானதது முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்துடன், குடும்ப திரைப்படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூரியின் மனைவியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர் கட்டா குஷ்தி மற்றும் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் நடிகர்கள் ராஜ் கிரண் , சுவாசிகா, பாபா பாஸ்கர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில், சுமார் 5 மாதங்களில் ரிலீசிற்கு தயாராகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை, லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.