ஒண்ணுமே இல்லாம வந்து இப்ப சக்திக்கு மீறி சம்பாதிச்சுட்டேன்… ‘மண்டாடி’ பட அறிமுக விழாவில் நெழ்ச்சியாக பேசிய நடிகர் சூரி!
Soori talks about success in Cinema: தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் நடிகர் சூரி இல்லை என்றால் படமே இல்லை என்பது போல பல முன்னணி நடிகர்களான கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த், அஜித், விக்ரம் என பலருடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்ததா இல்லையா என்பதை விட சூரியின் காமெடி வெற்றியடைந்தது.

நடிகர் சூரி
நடிகர் சூரி சினிமாவிற்கு ஒண்ணுமே இல்லாம வந்து இப்ப சக்திக்கு மீறி சம்பாதிச்சுட்டேன் என்று ‘மண்டாடி’ பட அறிமுக விழாவில் நெழ்ச்சியாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. நடிகர் சூரி தமிழ் சினிமாவில் கடந்த 1998 முதல் 2008-ம் ஆண்டு முதல் பல படங்களில் பெயரிடப்படாத சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படம் நடிகர் சூரிக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். ஆம் இந்தப் படத்தில் நடிகர் சூரி நாயகன் விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்திருப்பார். படத்தில் சூரி ஒல்லியான தேகத்துடன் ஹோட்டலில் நடக்கும் பரோட்டா சாப்பிடும் பந்தையத்தில் அசத்தியிருப்பார்.
இந்த காமெடிக்கு பிறகு பல நாட்களாக நடிகர் சூரியை மக்கள் பரோட்டா சூரி என்றே அழைத்து வந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சூரி பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் கலக்கி வந்தார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான களவானி, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம், சுந்தரபாண்டியன் படங்களில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், சீம ராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்கள் எல்லாம் காமெடியில் தூள் கிளப்பியது. இவர்களின் காம்பே தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் காம்போவாக அமைந்தது.
தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த சூரியை நாயகனாக்கி அழகுப் பார்த்தார் இயக்குநர் வெற்றிமாறன். ஆம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் சூரி. தொடர்ந்து காமெடியனாக சூரியைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் நாயகனாகவும் இந்தப் படத்தில் ஏற்றுக்கொண்டனர்.
விடுதலை பாகம் ஒன்று படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 2024-ம் ஆண்டு கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 என படங்கள் வரிசையாக வெளியாயனது.
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் சூரி நாயகனாக நடிக்கும் படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் முன்னதாக மாமன் படத்தின் அறிவிப்பு வெளியானது. சூரி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடிக்கிறார். உறவுகளுக்குள் நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக மண்டாடி படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A game of ropes, rage, and revenge ⛵🔥🌊#Mandaadi#MandaadiFirstLook@ActorSuhas @elredkumar @rsinfotainment #VetriMaaran @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar #Achyuthkumar @RavindraVijay1 @sachananamidass #sathyaraj@PeterHeinOffl #Azar @srkathiir @KiranDrk @pradeepERagav… pic.twitter.com/IHJfULP1Vl
— Actor Soori (@sooriofficial) April 19, 2025
இந்த நிலையில் மண்டாடி படத்தின் அறிமுக விழாவில் நடிகர் சூரி உருக்கமாக பேசியது தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் இந்த சினிமாவிற்கு ஒண்ணுமே இல்லாமல் வந்தேன். தற்போது சக்திக்கு மீறி சம்பாதிச்சுட்டேன். இதற்கு எல்லாம் நீங்க எல்லாம் தான் காரணம் என்று வெண்ணிலாக் கபடிக் குழு இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்தார்.