எத்தனை நாளுக்கு அப்படியே நடிக்க முடியும்… வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்
SJ Suryah about Villain Role: இவரது நடிப்பில் வெளியான நண்பன், மெர்சல், மாநாடு, டான், வாரிசு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராயன், இந்தியன் 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடந்து சினிமாவில் சிறப்புக் கதாப்பாத்திரம் முதல் வில்லன் கதாப்பாத்திரம் வரை அவர் நடித்தது சூப்பர் ஹிட் அடித்தது.

எஸ்.ஜே.சூர்யா
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் (SJ Suryah) இயற்பெயர் செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன். 1988-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1999-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு அஜித் வில்லனாக நடித்திருந்தார். மிகவும் வித்யாசமான தோற்றத்தில் நடிகர் அஜித் நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தென்னிந்திய சினிமாவில் மாஸ் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா எல்லா பேட்டிகளிலும் தனது இந்த வாழ்க்கைக்கு அஜித் தான் காரணம் என்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
வாலி படத்தை தொடர்ந்து 2000-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கிநார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்கள் ரசிகர்களிடியே நல்ல வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படங்கள் பல எக்ஸ்பிரிமெண்ட்களை கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவை கொண்டாடிய ரசிகர்கள் நடிகராகவும் அவரை ஏற்றுக்கொண்டனர். அதன்படி 2004-ம் ஆண்டு வெளியான நியூ படத்தை இயக்கியது மட்டும் இன்றி அந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்தார். வித்யாசமான கதைகளத்தைக் கொண்ட அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே படத்தையும் அவரே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
இதில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் இவர் வில்லனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து ஒரு நடிகர் ஹிட் படங்களைக் கொடுக்கும் நடிகரை அனைத்துப் படங்களிலும் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் எல்லா படங்களுக்கும் வில்லன் என்றாலே அது எஸ்.ஜே.சூர்யாதான் என்பது போல வரிசைக் கட்டுகிறது. அதன்படி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்திற்கும் அர்ஜூன் தாஸிற்கு முன்பாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்கக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கில்லர் படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகனாக தான் அடுத்த நிலைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது என்றும் அதானால் தொடந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.