SJ Suryah : ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த அப்டேட்!

SJ Suryah and Fahadh Faasil collaboration : தமிழ் சினிமாவில் மாஸ் வில்லனாகக் கலக்கி வருபவர் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா. பிரபலமான இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிலும், பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பிலும் உருவாக உள்ள படம் குறித்து அவர் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

SJ Suryah : ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா கொடுத்த அப்டேட்!

நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

Published: 

16 Apr 2025 15:46 PM

நடிகர் எஸ்.ஜே. சூர்யா (SJ, Suryah) இயக்குநராகப் படங்களில் அறிமுகமாகுவதற்கு முன், பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) , கமல் போன்ற முன்னணி பிரபலங்களின் படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அப்போது சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த எஸ்.ஜே. சூர்யா தற்போது, தமிழ் சினிமாவில் இவர் இல்லாத ஹிட் படங்கள் இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமான வில்லனாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரமின் (Vikram)  வீர தீர சூரன் 2 (Veera Dheera Soran 2) படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிகவும் பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் முக்கியமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் நடிகர் ஃபஹத் பாசில் (Fahadh Faasil) உடன் இணைந்து நடிக்கவிருந்த படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தை பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், அந்த தகவல்களை உறுதி செய்துள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா – ஃபஹத் பாசில் கூட்டணி படம் பற்றிய அப்டேட் ;

நடிகர் எஸ்.ஜே. சூர்யா ” நானும் நடிகர் ஃபஹத் பாசில் இணைந்து நடிக்கவிருந்த படம் உண்மைதான். ஆனால் ஃபஹத் பாசிலுக்கு போதிய நேரம் கிடைக்காததால் இந்த படம் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த படம் கண்டிப்பாக வரும் ஆனால், எப்போது வரும் என்று தெரியாது. நடிகர் ஃபஹத் பாசிலுக்கு சரியான நேரம் கிடைத்தால் இந்த படம் விரைவில் உருவாகும். இந்த படத்தை இயக்குநர் விபின் தாஸ்தான் இயக்கவுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வரும் அதற்கு, 1 ஆண்டு அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார்

எஸ்.ஜே.சூர்யா – ஃபஹத் பாசில் மாஸ் காம்போ ;

மலையாள சினிமாவை கடந்து, தற்போது பான் இந்திய நடிகராகவும், வில்லனாகவும் இருந்து வருபவர் ஃபஹத் பாசில். இவரின் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. அதைத் தொடர்ந்து முன்னதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து, நடிகர் ஃபஹத் பாசில் நடிக்கவிருந்த படம் தற்போது உறுதியாகியுள்ளது.  இந்தப் படம் இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா எப்படியோ, அதை போல மலையாள சினிமாவில் நடிகர் ஃபஹத் பாசில். இந்த இரு கூட்டணியும் ஒன்றாக இணைந்தால் கண்டிப்பாக இந்தப் படம் மாஸ் சம்பவமாக இருக்கும் என்று அனைவருக்குமே தெரியும். இந்த படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.