SJ Suryah : 10 வருடங்களுக்கு பின் மீண்டும்… எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஹேப்பி நியூஸ்!
SJ Suryah New Movie : தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் அதிரடி வில்லனாக நடித்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இரவின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் மீண்டும் கில்லர் என்ற படத்தின் மூலம் இயக்குநராகப் படங்களை இயக்கவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் 2000ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வளம் வந்தவர் எஸ்.ஜே. சூர்யா (S.J. Suryah). இவரின் அசாதாரமான நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2 ) படமானது வெளியாகியிருந்தது. இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரின் முன்னணி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம் (Vikram) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில்தான் நடிகர் எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தைத் தொடர்ந்து லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தற்போது படங்களில் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்து மீண்டும் படங்கள் இயக்குவதில் இறங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த படத்தை அவரே இயக்கி, அதில் அவரே முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடந்த 1999ம் ஆண்டு வெளியான வாலி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். மேலும் இறுதியாக இவர் இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து சுமார் 10 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டு படங்களை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு “கில்லர்” (Killer) என்று அவர் டைட்டில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இப்படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் நேரும் கூறியுள்ளார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் திரைப்படம்
நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை அவரே இயக்கி, அதில் அவரே முன்னணி கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் கதைக்களமானது முற்றிலும் காதல் கலந்த ஆக்ஷ்ன் திரில்லர் கதைகளுடன் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் படத்திற்கு எப்படி ஒரு வைப் இருக்குமோ, அதே போல இந்த படமும் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
இயக்குனராக நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அஜித் குமாரின் வாலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். இந்த படத்தைத் தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தை இயக்கி மிகவும் பிரபலமானார். இந்த படங்களில் கேமியோ தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் நடடிகராக அறிமுகமாகினார்.
இதைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பின் மீது ஆர்வம்கொண்ட இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் வில்லனாகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் இரா வில்லனாக நடித்திருந்த படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது மீண்டும் இயக்குநராகப் படங்களை இயக்கவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.