நாஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா படக் குழுவினரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் போட்டோ
Sivakarthikeyan Meets Alappuzha Gymkhana Team: நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மலையாள படமான ஆலப்புழா ஜிம்கானா குழுவினரை நேரில் சந்தித்து பேசினார். பிரபல திரைப்பட இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று வெளியாக உள்ளது. மேலும் ஆலப்புழா ஜிம்கானா படக்குழுவினர் சிவகார்த்திகேயனுடன் உரையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆலப்புழா ஜிம்கானா படக் குழுவினருடன் சிவகார்த்திகேயன்
ஆலப்புழா ஜிம்கானா (Alappuzha Gymkhana) படம் சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலையாள படங்களில் ஒன்றாகும். பிரேமலு (Premalu) படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் நஸ்லேன் (Naslen) நாயகனாக நடித்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன் காமெடி படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் உண்டே படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கியுள்ள இந்தப் படம், விஷு பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக ஆலப்புழா ஜிம்கானா படக்குழு தமிழில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) நேரில் சந்தித்தது உரையாடியது தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலப்புழா ஜிம்கானாவில் நடித்த இளம் படக் குழுவினரை சந்தித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிப்பதாக படத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவுடன் படக்குழுவினர் சிவகார்த்திகேயனை சந்தித்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஆலப்புழா ஜிம்கானா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you, @Siva_Kartikeyan sir, for taking the time to meet with us and for sharing your kind thoughts on #AlappuzhaGymkhana trailer and songs. Your words have given our team so much energy and inspiration Thank you for your constant encouragement! 🙏
.
In theatres from APRIL 10… pic.twitter.com/gfa24UMNYu— Vaisakh C (@vaisakh_c_) April 8, 2025
அந்த பதிவில் கூறியுள்ளதாவது, நன்றி, சிவகார்த்திகேயன் சார் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும், ஆலப்புழா ஜிம்கான படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த உங்கள் அன்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கும். உங்கள் வார்த்தைகள் எங்கள் குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன. உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் நடிகர்கள் மமிதா பைஜு மற்றும் நஸ்லேனின் பிரேமலு படத்தைப் பாராட்டிய முதல் சில பிரபலங்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். ‘பிரேமலு’ படத்தைப் பாராட்டி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார். அவர், பிரேமலு அன்பான, காமெடி நிறைந்த பொழுதுபோக்குக்காக முழு படக் குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் இந்த அன்பான பதிவை ரசிகர்கள் பாராட்டி வந்தது குறிப்பிடதக்கது.