பராசக்தியைத் தொடர்ந்து பிரபல நடிகரை வைத்துப் படத்தை இயக்கும் சுதா கொங்கரா?

Sudha Kongaras Next Film : தமிழில் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் சில படங்கள் மட்டும் தமிழில் வெளியாகினாலும், ஒவ்வொரு படமும் தரமாக இருக்கும். இவர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் சூப்பர் ஹிட் நடிகர் சிலம்பரசனுடன்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பராசக்தியைத் தொடர்ந்து பிரபல நடிகரை வைத்துப் படத்தை இயக்கும் சுதா கொங்கரா?

சுதா கொங்கரா

Published: 

28 Apr 2025 15:57 PM

தமிழ் சினிமாவில் துரோகி (Drohi) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா (Sudha Kongara). கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் (Vishnu Vishal and Srikanth) இணைந்து நடித்திருந்தனர். முதல் படமானது அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அதைத் தொடர்ந்து இவருக்கு ஒட்டுமொத்த இந்திய அளவிற்குப் பிரபலத்தை கொடுத்தப் படம் இறுதிச்சுற்று (Irudhi Suttru). இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவன் மற்றும் ரித்திகா சிங் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவுடன் சூரரைப்போற்று போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடித்தது வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் ஒருவருடன் சுதா கொங்கரா இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவரும் சிலம்பரசன்தான்.

இந்த தகவலானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தியானது தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசன் தக் லைப் படத்தை தொடர்ந்து STR 49 படத்தில் நடிக்கவுள்ளார். பார்க்கிங் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராம்குமார் பாலாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

STR 49 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் வெளியாவதற்குத் தயாராகியுள்ள படம் தக் லைப். இந்த திரைப்படத்தைப் பிரபல கோலிவுட் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து. இதை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR49 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, பிப்ரவரி மாதம் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து STR 50 மற்றும் 51 போன்ற படங்களின் அறிவிப்புகளும் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை தந்தது.

மேலும் சிம்பு STR 49, 50 மற்றும் STR 51 படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.