Silambarasan TR: லிஸ்டில் இணையும் சிம்பு படம்.. சாய் அபயங்கரின் அசுர வளர்ச்சி!
STR 49 Movie Update : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் STR 49. இந்த படத்தை பார்க்கிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து நடிகர் சிம்பு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாருமில்லை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான்.

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் முன்னணி நடிப்பில் தற்போது தக் லைப் (Thug Life) , STR 49,50 மற்றும் 51 போன்ற படங்கள் வரிசைகட்டி நிற்கிறது. இதில் இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்திலிருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிலம்பரசன் STR 49 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காகப் பிரபல இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது.
தற்போது அந்த செய்தியானது உறுதியாகியுள்ளது. இன்று 2025, ஏப்ரல் 14ம் தேதியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் உள்ளது. அதன் பதிவின் கீழ் “இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறி, “இந்த புதிய அத்தியாயத்தை இசை மற்றும் புத்துணர்ச்சியுடன் தொடங்குகிறேன்” என அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட பதிவு :
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Starting this new chapter with music and fresh energy.
Welcoming @SaiAbhyankkar on board! #STR49 pic.twitter.com/dzFwVZsmfs— Silambarasan TR (@SilambarasanTR_) April 14, 2025
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஏற்கனவே நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்திலும், ராகவா லாரஸ்ஸின் பென்ஸ் படத்திலும், பிரதீப் ரங்கநாதனின் பிஆர் 04 படத்திலும் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். தற்போது மேலும் நடிகர் சிலம்பரசனின் STR 49 திரைப்படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.
STR 49 திரைப்படம் :
கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் நடிகர்சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து அவரின் மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகியது. அதில் நடிகர் சிலம்பரசனின் 49வது திரைப்படத்தைத்தான் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் சிலம்பரசன் புத்தகத்திற்குள் கத்தியை வைத்திருப்பதுபோல் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது.
இந்த படமானது ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் சாய் பல்லவி, கயாடு லோஹர் போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.