Silambarasan : திருமணம் பிரச்னை இல்லை.. ஆனால் அதற்கு சரியான நபர் கிடைக்க வேண்டும்.. மனம் திறந்த சிம்பு!
Actor Silambarasan Talks About Marriage : தமிழ் ரசிகர்களின் மனதில் சிறுவயதிலேயே இடம் பிடித்தவர் சிலம்பரசன். இவர் தற்போது முன்னணி கதாநாயகனாகப் படங்களில் கலக்கி வருகிறார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வரும் நிலையில், அதில் திருமணத்தைப் பற்றி சிம்பு பேசியுள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan ) நடிப்பில் இறுதியாக பத்து தல (Pathu Thala) திரைப்படம் வெளியாகியிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படமானது சூப்பர் ஹிட்டாகியது. இதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு எந்த படங்களும் வெளியாகவில்லை. தற்போது இவரின் நடிப்பில் மட்டும் 4 படங்கள் உருவாகி வருகிறது. அதில் முதல் திரைப்படம் தக் லைப் (Thug Life). இந்த படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலேயே வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு அடுத்த லீட் ரோலில் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஜோடி விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் இந்த படத்தில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை அடுத்ததாக STR 49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகக் கலக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தக் லைப் படத்தின் ஃப்ர்ட்ஸ் சிங்கிள் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிம்பு திருமணத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அப்போது திருமணம் என்பது பிரச்னை இல்லை, மக்கள் தான் பிரச்னை என்று அவர் கூறியுள்ளார். நடிகர் சிலம்பரசன் பேசியது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
திருமணம் குறித்து நடிகர் சிலம்பரசனின் கருத்து :
தக் லைப் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலம்பரசன் “திருமணம் என்பது பிரச்னை கிடையாது, மக்கள்தான் அதில் பிரச்னை. இப்போதுள்ள காலகட்டத்தில் யாரிடமும் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை சுத்தமாக இல்லை, பலரிடமும் அது குறைந்துவிட்டது. நீ இல்லை என்றால் வேறொருவர் என்ற மனநிலை தற்போது பலரிடமும் இருக்கிறது. இது உண்மைதான் என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு இருக்கக்கூடாது. திருமணத்திற்கான சரியான நேரம் வரும்போதும் அல்லது சரியான நபர் கிடைத்தபின் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும் என்று நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். தற்போது இவர் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் சிலம்பரசனின் அட்வைஸை கேட்டு தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
சிலம்பரசனின் வரிசைகட்டும் படங்கள் :
நடிகர் சிலம்பரசன் நடித்துவரும் தக் லைப் படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் பலவேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் இவருடன் நடிகர் சந்தானமும் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் மற்றும் மிருணாள் தாக்கூர் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் STR 50 படத்தில் நடிக்கவுள்ளார். இதை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் STR 51 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.