Silambarasan: ‘லூசு பெண்ணே’ பாடலை பாடி அசத்திய சிம்பு மற்றும் சாய் அபயங்கர்!
Silambarasan And Sai Abhyankkar : கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனும், பாடகராகவும் இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் STR49 படமானது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு மற்றும் சாய் அபயங்கர் இணைந்து லூசு பெண்ணே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோ, பாடகர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவர் தனது சிறு வயதிலிருந்தே, தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவரின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாகத் தயாராகி வரும் படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை இயக்குநர் மணி ரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இதில் நடிகர் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த 2025ம் ஆண்டில் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படம் வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இவர், ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கிய, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
STR 49 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் இணைந்து “லூசு பெண்ணே” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
#SaiAbhyankkar & #SilambarasanTR singing ‘LoosuPenne’ song together ♥️🔥♥️
The #STR49 Combo !!pic.twitter.com/fYB1HB90Ho— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2025
நடிகர் சிலம்பரசனின் STR 49 திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சிலம்பரசன் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருந்தார். இந்த காம்பாவானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் சிம்பு மற்றும் சாய் அபயங்கர் இணைந்து பாடலை பாடி அசத்தியுள்ளார்.
STR 49 திரைப்படம் :
மேலும் இவர்கள் இருவரின் காம்போ STR 49 திரைப்படத்திலும் அருமையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஏற்கனவே, பென்ஸ், சூர்யா 45, போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த வரிசையில் நடிகர் சிலம்பரசனின் STR 49 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரின் ஆல்பம் பாடல்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானதைத் தொடர்ந்து இவருக்குப் படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த STR49 படத்தில், நடிகர் சிலம்பரசனுடன் நடிகர் சந்தானமும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, மே மாதத்தில் தொடங்கவுள்ளதாம். மேலும் இந்த படம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.