என்னுடைய தந்தையின் நிழலில் இருக்க விருப்பம் இல்லை – நடிகர் சிபி சத்யராஜ் ஓபன் டாக்

Actor Sibi Sathyaraj About His Father: தந்தையின் பெயரால் சினிமாவிற்கு வந்த சிபி சத்யராஜ் நடிப்பில் இத்தனை படங்கள் வெளியாகி இருந்தாலும் அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு என எந்த ப்ரேக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. 

என்னுடைய தந்தையின் நிழலில் இருக்க விருப்பம் இல்லை - நடிகர் சிபி சத்யராஜ் ஓபன் டாக்

சிபி சத்யராஜ்

Updated On: 

18 Apr 2025 11:57 AM

நடிகர் சிபி சத்யராஜ் (Sibi Sathyaraj) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை நடிகர் சத்யராஜ் (Sathyaraj) நிழலில் இருக்க விருப்பம் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தது வைரலாகி வருகின்றது. 2003-ம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார் சிபி சத்யராஜ். இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் சில எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் 1 (Student No 1) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜோர், மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை ப்ரதர்ஸ், நெஞ்சில், லீ, நாணயம் என தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2014-ம் ஆண்டு நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர், கபடதாரி, ரங்கா, மாயோன், வட்டம் என தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தனியாக நடித்த படங்கள் வெற்றியை சந்திக்கவில்லை என்பதால் தனது தந்தை சத்யராஜ் உடன் இணைந்து நடிகர் சிபி சத்யராஜ் நடித்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் வட்டம். இந்தப் படத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து நடிகர்கள் ஆண்ட்ரியா ஜெர்மையா, அதுல்யா ரவி, ஷ்யாம் பிரசாத் ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிபி சத்யராஜ் டென் ஹவர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜின் இன்ஸ்டா பதிவு:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “எனது தந்தையின் நிழலில் நான் இருக்க விரும்பவில்லை. அதனால்தான், முன்னதாக அவருடன் இணைந்து நடித்த படங்களுக்கு பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்வதிலிருந்து ஒரு இடைவெளி எடுத்தோம். பிறகு ஜாக்சன் துரை படத்திற்காக நாங்கள் மீண்டும் இணைந்தோம்.

அப்போது கூட, அது ஒரு தனித்துவமான கதாப்பாத்திரத்தை கொண்டிருந்ததால் மட்டுமே” என்றும் தெரிவித்திருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திகில்-நகைச்சுவை படத்தில் சத்யராஜ் ஒரு பேயாக நடித்தார். இப்போது ஜாக்சன் துரை 2-க்காக நாங்கள் மீண்டும் இணைந்துள்ளோம், அதில் அவர் எனக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.