அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
Sumo Movie Trailer : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிர்ச்சி சிவா. இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டிலே வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம் சுமோ இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவாவின் (Mirchi Shiva) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ (Sumo). இந்த படத்தை இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் (S. P. Hosimin) இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் காமெடி கலந்த, விளையாட்டு சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது கடந்த 2020ம் ஆண்டிலே வெளியிடுவதற்கு தயாராக இருந்தது. பின் கொரோனா பரவிய நிலையில், அப்படியே இந்த படத்தின் ரிலீசும் தள்ளிப்போனது. தற்போது 4 வருடங்களுக்கு பின் தற்போது, ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசாரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்த் (Priya Anand) நடித்துள்ளார்.
இவர்களுடன் முக்கிய தோற்றத்தில் நடிகர்கள் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படக்குழு சுமோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரானது மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.
Video Credits: Sony Music South.