நாங்க சிம்ரன் கூடலாம் நடிக்க கூடாதா? டூரிஸ்ட் ஃபேமிலி பட ட்ரெயலர் வெளியீட்டு விழாவில் சசிக்குமார் கலகல பேச்சு!

இறுதியாக 2024-ம் ஆண்டு வெளியான நந்தன் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் சரவணன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஷ்ருதி பெரியசாமி நடித்திருந்தார். படத்தில் மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் சசிக்குமார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

நாங்க சிம்ரன் கூடலாம் நடிக்க கூடாதா? டூரிஸ்ட் ஃபேமிலி பட ட்ரெயலர் வெளியீட்டு விழாவில் சசிக்குமார் கலகல பேச்சு!

டூரிஸ்ட் ஃபேமிலி

Published: 

23 Apr 2025 20:26 PM

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் சசிக்குமார் (Sasikumar). இவர் 2008-ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை சசிக்குமாரே இயக்கி இருந்தார். இதில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிபுலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, கொடிவீரன், பேட்ட, அயோத்தி, கருடன் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சுப்ரமணியபுரம் மற்றும் 2010-ம் ஆண்டு வெளியான ஈசன் என்ற படத்தை இயக்கியதற்கு பிறகு அவர் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தயாரிப்பு, நடிப்பு என சினிமாவில் வலம் வருகிறார் சசிக்க்குமார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து ராட்சசி படத்தில் நடித்த கமேலேஷ் மற்றும் மலையாளத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆவேஷம் படத்தில் நடித்த நடிகர் மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் சசிக்குமார் மற்றும் சிம்ரனுக்கு மகன்களாக நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இலங்கை தமிழர்களை மையமாக வைத்து காமெடி செண்டிமெண்டுடன் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்க்கையில் இருக்கும் துன்பத்தை மிகவும் எளிமையாக புரியும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி படதின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் அட்லி:

இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த விழாவில் நடிகர் சசிக்குமார் பேசியபோது இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது பலரும் நடிகை சிம்ரன் உங்களுக்கு ஜோடியா நடிக்கிறாங்களா? என்று மறுபடி மறுபடி கேட்டனர். ஏன் நாங்க சிம்ரன் கூடலாம் நடிக்க கூடாதா என்று கலகலப்பாக பேசியுள்ளார்.