அயோத்தி படத்தால் நடந்த நன்மை… நெகிழ்ந்து பேசிய சசிக்குமார்!

Ayothi Movie: நடிகர் சசிக்குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆர். மந்திர மூர்த்தி இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அயோத்தி. இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் உடன் இணைந்து நடிகர்கள் யஷ்பால் சர்மா , ப்ரீத்தி அஸ்ரானி , புகழ் , அஞ்சு அஸ்ரானி மற்றும் மாஸ்டர் அத்வைத் வினோத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அயோத்தி படத்தால் நடந்த நன்மை... நெகிழ்ந்து பேசிய சசிக்குமார்!

அயோத்தி

Published: 

24 Apr 2025 07:05 AM

நடிகர் சசிக்குமார் (Sasikumar) நடிப்பில் மே மாதம் 1ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடு கடந்து வரும் ஈழ குடும்பத்தின் பின்னணி கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரனின் மகன்களாக நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரும் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று வெளியான ட்ரெய்லரும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சசிக்குமார் அயோத்தி படத்தால் நடந்த நன்மை குறித்து பேசியுள்ளார்.

சசிக்குமார் நடித்த அயோத்தி படம்:

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் வசிப்பவர் பல்ராம். இவர் தனது மனைவி ஜானகி, மகள் ஷிவானி மற்றும் மகன் சோனுவுடன் தமிழகத்தில் உள்ள ராமேஷ்வரத்திற்கு ஒரு ஆன்மீக பயணத்தை தொடங்குவார்கள். அப்போது மதுரையில் ரயிலில் இருந்து இறங்கும் அந்த குடும்பம் ஒரு வாடகை காரை பிடித்து தீபாவளிக்கு முந்தைய நாள் ராமேஷ்வரத்திற்கு செல்ல முற்படுகிறார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பல்ராமின் மனைவி ஜானகி உயிரிழந்துவிடுகிறார். அவரது உடலை மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நினைக்கும் போது ஏற்படும் பிரச்னைகளே படத்தின் மையக் கரு. இந்த நிலையில் கார் ஓட்டுநரின் நண்பராக அந்த குடும்பத்திற்கு அறிமுகம் ஆகிறார் நடிகர் சசிக்குமார்.

அவர் தமிழ் தெரியாமல் தவிக்கும் பல்ராமின் குடும்பத்திற்கு உதவி செய்ய முற்படுகிறார். தீவிர இந்து பற்றாளராக இருக்கும் பல்ராம் முதலில் அவர்களின் உதவியை ஏற்க மறுத்து பின்பு வேறு வழியின்றி அதனை ஏற்கிறார். பண்டிகை நாளில் ஜானகியின் உடலை சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைப்பதில் பல சிக்கள்கள் ஏற்படுகின்றது.

அந்த சிக்கள்கள் அனைத்தையும் சரி செய்து கார் ஓட்டுநரின் நண்பரான சசிக்குமார் எப்படி அந்த உடலை அயோத்திக்கு அனுப்பி வைக்கிறார் என்பதே படத்தின் கதை. தீவிர இந்து பற்றாளரான பல்ராம் சசிக்குமாரின் செயலைக் கண்டு நெகிழ்ச்சி அடைகிறார். இறுதியாக தமிழ் நாட்டில் இருந்து அயோத்திக்கு செல்வதற்கு முன் சசிக்குமாரிடம் பெயர் என்ன என்று பல்ராம் கேட்கிறார்.

அப்போதுதான் படத்தில் சசிக்குமாரின் பெயர் கூறப்படும். அதில் அவர் தனது பெயர் அப்துல் மாலிக் என்று கூறுகிறார். அப்போதுதான் பல்ராமிற்கு தெரியவரும் இவ்வளவு நேரம் தங்களுக்கு உதவியது முஸ்லிம் என்பது. இதனை கேட்ட பல்ராம் குற்ற உணர்ச்சியில் நொறுங்கி அழுவார். அந்தக் காட்சி திரையரங்கில் உள்ளவர்களையும் கண்கலங்க செய்யும்.

இந்தப் படத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை விமானத்தில் கொண்டு செல்வது எவ்வளவு சிரமமான விசயம் என்பதை மிகவும் விளக்கமாக காட்டியிருந்தனர்.

அயோத்தி படத்தால் ஏற்பட்ட நன்மை:

இந்த நிலையில் இந்தப் படத்தால் ஏற்பட்ட நன்மை குறித்து நடிகர் சசிக்குமார் பேசியதாவது, விமானத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை எளிமையாக மாற்றிள்ளனர். அதற்காக, ரூபாய் 1 லட்சம் வரை மானியமும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தால் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக தன்னிடம் ஒருவர் கூறியதாக சசிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கே தெரியாமல் ஒரு நல்லது நிகழ்ந்திருக்கிறது என்று சசிக்குமார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.