Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கலகலப்பான காமெடியுடன் வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்

Devil's Double Next Level - Official Trailer | நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வாழ்த்துப் பதிவுடன் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கலகலப்பான காமெடியுடன் வெளியானது நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர்
டிடி நெக்ஸ்ட் லெவல்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Apr 2025 14:47 PM

நடிகர் சந்தானம் (Santhanam) நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் இங்க நான் தான் கிங்கு (Inga Naan Thaan Kingu) ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது தொடந்து நடிகர் சந்தானம் அடுத்தாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிக்க கமிட்டானார். இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், யாசிகா ஆனந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என ஒரு பெரிய நர்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரில், சந்தானம் ஜெயிலரையும் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரையும் விமர்சிக்கிறார். மேலும் கௌதம் மேனன் தனது காக்க காக்க படத்தில் வரும் ‘ஓ மஹாசியா’ பாடலை ரீ கிரியேட் செய்கிறார். அதுமட்டுமின்றி, பழிவாங்கும் பேய்களை சந்திக்கும் சந்தானத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு தெளிவையும் இந்த டிரெய்லர் வழங்குகிறது.

நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

வரவிருக்கும் படத்தில், சந்தானம் திரைப்பட விமர்சகராகவும், திரைப்பட தயாரிப்பாளர்களால் வெறுக்கப்படும் ஒருவராகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிடி நெக்ஸ்ட் லெவலுக்கு இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துடன் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் தவிர, டிடி நெக்ஸ்ட் லெவல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லுக்கு துட்டு திரைப்படத் தொடர்ச்சி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு ராம்பாலா இயக்கிய திகில் நகைச்சுவைத் திரைப்படத்துடன் தொடங்கியது. அவர் மீண்டும் தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கினார், இது 2019 இல் வெளியிடப்பட்டது. மூன்றாவது படமான டிடி ரிட்டர்ன்ஸ் 2023 இல் வெளியிடப்பட்டது, இதை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!...
STR 49 படத்தில் இணைந்த சிம்பு - சந்தானம் காம்போ!
STR 49 படத்தில் இணைந்த சிம்பு - சந்தானம் காம்போ!...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பு - அஸ்வினி வைஷ்ணவ்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பு - அஸ்வினி வைஷ்ணவ்...
வீட்டில் கண்ணாடி வைக்க சிறந்த திசை எது? - வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
வீட்டில் கண்ணாடி வைக்க சிறந்த திசை எது? - வாஸ்து சொல்லும் டிப்ஸ்!...
அனிருத் குரலில்... கவினின் கிஸ் படத்தின் முதல் சிங்கிள்!
அனிருத் குரலில்... கவினின் கிஸ் படத்தின் முதல் சிங்கிள்!...
காலில் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்
காலில் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்...
மெசேஜ்களை இழக்கமால் வாட்ஸ்அப்பில் புதிய நம்பரை மாற்றுவது எப்படி?
மெசேஜ்களை இழக்கமால் வாட்ஸ்அப்பில் புதிய நம்பரை மாற்றுவது எப்படி?...
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 35 வீரர்கள் தேர்வு! யார் கேப்டன்?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு 35 வீரர்கள் தேர்வு! யார் கேப்டன்?...
நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்... நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவு
நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்... நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவு...
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!...