Santhanam : சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ – டிரெய்லர் ரிலீஸ் எப்போது?
DD Next Level Trailer Update : தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சந்தானம் (Santhanam). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இங்க நான் தான் கிங்கு (Inga Naan Thaan Kingu). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஆனந்த் நாராயண் (Anand Narayan) இயக்கியிருந்தார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நடிகை ப்ரியாலயா நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பைக் கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடித்து வந்த படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படமானது சந்தானத்தின் தில்லுக்குத் துட்டு (Dhilluku Dhuddu) படங்களின் வரிசையில் உருவாகியுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே 3 படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், நான்காவது பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் (S. Prem Anand) இயக்கியுள்ளார். இந்த படமானது திகில் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தின் இறுதியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் வரும் 20025, ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
#DevilsDoubleNextLevel Trailer from April 30 🍿
In Cinemas May 16 #DevilsDoubleNextLevelFromMay16 @arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo @dopdeepakpadhy… pic.twitter.com/6T5wCWkKhx
— Santhanam (@iamsanthanam) April 28, 2025
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நடிகை கீதிகா திவாரி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் யாஷிகா ஆனந்த், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது.
இந்த திரைப்படமானது முதல் 3 பாகங்களைப் போல, முற்றிலும் காமெடி மற்றும் திகில் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. சந்தானத்தின் இந்த படத்தை, நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியான நிலையில், அதை தொடர்ந்து படக்குழு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.