டி.ராஜேந்தர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… கமெடியாக சொன்ன சந்தானம்!
Actor Santhanam about T Rajendar: எனக்கு சினிமாவில் யாரோட உதவியும் தேவை இல்லை எல்லாத்தையும் நானே பன்னுவேன் என்பது போல பலருக்கு எடுத்துக்காட்டாக அமைந்தார் டி.ராஜேந்தர். சினிமாவில் நடிகர் நடிக்க மட்டுமே செய்யனு. இயக்குநர் படங்களை இயக்க மட்டுமே செய்யனு அப்படிங்கிற விசயத்தை மாத்தி யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் செய்யலாம் என்பதற்கு சான்றாக அமைந்தார் டி.ராஜேந்தர்.

சந்தானம், டி.ராஜேந்தர்
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் (T Rajendran) ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சந்தனாம் (Santhanam) பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு தலை ராகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறியப்பட்டவர் டி.ராஜேந்தர். இந்தப் படத்தில் பாடல்களையும் எழுதியுள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு நடிகர்கள் சங்கர், ரூபா, சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஒருதலையாக காதலிக்கும் ஆண்களின் வலியை மிகவும் நேர்த்தியாக அந்தப் படத்தில் சொல்லியிருப்பார் டி.ராஜேந்தர். படத்திற்கு இசையும் டி.ராஜேந்தர் அமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது குறிப்பிடதக்கது.
டி.ராஜேந்தருக்கு சினிமாவில் மட்டும் இல்லை தனிபட்ட வாழ்க்கையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது. இதுவரை இவர் இயக்கி நடித்த படங்களிலும் சரி மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் போது சரி நாயகிகளை தொடாமலே நடிப்பார் என்பது தான். இது எந்த நடிகரிடமும் இல்லாத ஒரு விசயம் ஆகும்.
ஒருதலை ராகம் படத்தை தொடர்ந்து இரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கு ஒர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் ஆகிய படங்களை இயக்கியும், நடித்தும், இசையமைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் டி.ராஜேந்தர்.
இவரது மூத்த மகன் தான் சிம்பு. சிம்பு டி.ராஜேந்தரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறையில் காலடி வைத்தார். 1984-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்த உறவைக் காத்த கிளி என்ற படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். சிம்புவின் இந்த சினிமா வளர்ச்சிக்கு அவரது தந்தை டி.ராஜேந்தர் தான் மிகப்பெரிய காரணம்.
இந்த நிலையில் டி.ராஜேந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை நடிக்க வைக்கும் போது எப்படி நடந்துக்கொண்டார் என்பதை நடிகர் சந்தானம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் டி.ராஜேந்தர் நடிக்க சொல்லிக்கொடுக்கும் போது சரியாக பன்னவில்லை என்றால் டென்ஷன் ஆகிடுவார்.
ஈசிஆரில் ஷூட்டிங் எடுத்துகிட்டு இருக்கோம். ஹீரோ பாம்பே, ஹீரோயினும் பாம்பே. நீச்சல் குளம் அருகே ஒரு சீன் எடுத்துகிட்டு இருக்கோம். நீச்சல் குளத்திற்கு மறுபுறம் நடிகர்கள் இருக்க இந்த பக்கம் நாங்க நிக்கிறோம். அப்போ டி.ஆர். சார் இந்த பக்கம் நின்னுகிட்டு ஹீரோ கிட்ட நடிக்க சொல்லி கொடுக்கிறார் அவன் எதும் பன்னாம நிக்கிறான்.
இவர் இந்த சைட்ல இருந்து பன்னுடா பன்னுடானு சொல்லிட்டே இருந்தவரு உடனே தண்ணில குதிச்சு நீச்சல் குளத்துக்கு அந்தப் பக்கம் போய் ஹீரோக்கு ரெண்டு அரை கொடுத்து என்ன கூப்பிட்டு என்ன வச்சு எப்படி ஹீரோயின்கூட நடிக்கனும் சொல்லி கொடுத்தார். ஏன்னா அவர்தான் ஹீரோயின்களை தொட மாட்டாரே என்று அந்த சம்பவத்தை காமெடியாக கூறினார்.