Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை வர காரணம் இந்த நடிகர் தான் – நடிகர் சந்தானம்

Actor Santhanam about Movies: இதயத் திருடன், பிப்ரவரி 14, இங்லீஷ்காரன், ஒரு கல்லூரியின் கதை, அன்பே ஆருயிரே, சம்திங் சம்திங், வல்லவன் என தொடந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சந்தானம். தொடந்து விஜய், அஜித், தனுஷ், சிம்பு , விஷால், ஜெயம் ரவி, ஆர்யா என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை வர காரணம் இந்த நடிகர் தான் – நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2025 16:39 PM

நடிகர் சந்தானம் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர யார் காரணம் என்பது குறித்து மனம் திறந்து முன்னதாக நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் சந்தானம். நிகழ்ச்சியில் முன்னதாக வெளியான படங்களை கலாய்க்கும் விதமாக காமெடியாக ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக வெள்ளித்திரை அறிமுகம் ஆனார். சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் மொட்டை மதனுடனான காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தா சந்தானம்.

ஒரு கட்டத்தில் சந்தானம் இருந்தால் தான் படம் என்கின்ற அளவிற்கு கோலிவுட் சினிமாவில் காமெடியின் உச்சத்திற்கு சென்றார். சந்தானம். விஷால், ஆர்யா, ஜீவா, சிம்பு ஆகியோரின் படங்களில் அவரது உற்ற நண்பனாக இருந்து காமெடியில் கலக்கியிருப்பார் சந்தானம். சந்தானம் ஒரு படத்தில் இருந்தால் போதும் அது ஹிட் என்ற நிலைக்கு மாறியது தமிழ் சினிமா.

தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம் கதையின் நாயகனாகத் நடிக்கத் தொடங்கிய படம் அறை எண் 305-ல் கடவுள். இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் 2014-ம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நாயகனாக தோற்றம் அளித்தார்.

அதனை தொடர்ந்து இவர் நாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், குளு குளு, டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் மக்களிடன் வெகுவாக பாராட்டைப் பெற்றது. கடந்த ஆண்டு இறுதியாக இவர் நாயகனாக நடித்த இங்க நான் தான் கிங்கு படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணமே நடிகர் சிம்பு தான். அவர் இல்லனா சினிமா திரையுலகத்திற்குள் நான் கிடையாது. அவர்தான் என்ன டிவில இருக்கும் போது ஒரு பெரிய கேரக்டர் மன்மதன்ல கொடுத்தாரு. அதுல கவுண்டமணி சாரும் இருந்தாரு. அந்தப் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாகிட்ட சொல்லு அன்பே ஆருயிறே படமும் சிம்புதான் எனக்கு ரெக்கமெண்ட் பன்னாரு. அதுவும் செம்ம ஹிட் ஆச்சு.

அடுத்தடுத்து சிம்புவுடன் தொடந்து படங்கள் நடிச்சுட்டு வந்தேன். ரொம்ப பிசியாவும் ஆகிட்டேன். அப்பறம் நாயகனாகத் நடிக்கத் தொடங்கிய பிறகு ஏன் அத மட்டுமே பன்றீங்க எங்க கூடலாம் சேர்ந்து நடிக்கலாம்ல என்று கேட்டார். இனி அப்படி நடிக்கலாம் என்று அந்த பேட்டியில் சந்தானம் தெரிவித்துள்ளார்.

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...