Santhanam : சிம்பு அழைத்தால் மறுக்கமுடியுமா? STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!

STR 49 Movie New Update : தமிழில் முன்னணி கதாநாயகனாக தற்போது கலக்கி வருபவர் சந்தானம். ஒரு காலத்தில் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், தற்போது முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசனின் STR 49 படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் பரவிவந்த நிலையில், அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Santhanam : சிம்பு அழைத்தால் மறுக்கமுடியுமா? STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!

STR 49 படத்தில் சந்தானம்

Published: 

24 Apr 2025 16:58 PM

தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவத்திலிருந்தது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் சிலம்பரசன் (Silambarasan TR) . தனது தந்தை டி. ராஜேந்திரனின் (T. Rajendran)  படங்களில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். அஜித், விஜய் இவர்களின் வரிசையில், தற்போது சிலம்பரசனும் இணைந்துள்ளார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவரின் நடிப்பிற்கும், பாடலுக்கும் ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு எந்த படங்களும் வெளியாகவில்லை. இறுதியாக இவரின் நடிப்பில் பத்து தல  (Pathu Thala) என்ற படம் வெளியாகியிருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இது, நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தனது கைவசம் 4 படங்களை வைத்துள்ளார். அதில் தற்போது ரிலீசிற்கு காத்திருப்பது தக் லைஃப் (Thug Life).

இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் STR49 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தானமும்  (Santhanam ) லீட் ரோலில், சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நடிகர் சந்தானம் அதை உறுதி செய்துள்ளார்.

STR 49 படத்தில் நடிகர் சந்தானம் உறுதி :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சந்தானம், அதில் பேசியபோது “நடிகர் சிலம்பரசன் சார் ஒரு நாள் என்னிடம் போன்செய்து என்னிடம் பேசினார். அதில் அவர் என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா என்று அவர் கேட்டார். சிம்பு கேட்டு நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா, சிம்பு எப்போது கேட்டாலும் சரி என்று தான் சொல்வேன் என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார். இதன் மூலம்  சிலம்பரசனின் STR 49 படத்தில் நடிகர் சந்தானம்  நடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த கூட்டணி சுமார் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையவுள்ளது.

STR 49 படத்தின் அறிவிப்பு :

நடிகர் சிலம்பரசனின் 49வது படத்தை, ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் தகவலின்படி சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.