STR 49 Update : சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி? கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?

Silambarasan TR And Santhanam : தமிழ் நடிகர் சிலம்பரசனின் மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் STR49 படமானது உருவாகிவரும் நிலையில், சந்தானம் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் சிலம்பரசனுடன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு அவர் எவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார் தெரியுமா, அதைப் பற்றிப் பார்க்கலாம்.

STR 49 Update : சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி? கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?

நடிப்பது உறுதி.. STR49 படத்தில் நடிக்க இப்படி ஒரு

Published: 

16 Apr 2025 19:39 PM

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan TR) நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அதற்கு முன் கடந்த 2023ம் ஆண்டில் பத்து தல  (Pathu Thala)  என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜோடியே இல்லாமல் சிங்கிளாக நடித்திருந்தார். இந்த படமும் சிம்புவின் ஆக்ஷ்ன் கம்பேக் படமாக அமைந்திருந்தது. தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam)  தக் லைப் (Thug Life) படத்தில் இணைந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், அவருக்கு அடுத்த லீட் நாயகனாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வரும் நிலையில், அதைத்தொடர்ந்து புது படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரின் நடிப்பில் மட்டுமே தற்போது 3 படங்கள் உருவாக்கவுள்ளது. அதி ஒரு படம்தான் STR 49. இந்த படத்தை ஹரிஸ் கல்யாணின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கி வருகிறார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் முடித்து தற்போது, ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது.

தற்போது இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுடன், நீண்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலும் உறுதியாகியுள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிப்பதற்குச் சந்தானம் சுமார் ரூ.7 கோடியை சம்பளமாகக் கேட்டதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவலின் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

சிம்புவின் STR 49 திரைப்படம் :

நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் STR 49 படத்தின் அறிவிப்பு கடந்த, 2025, பிப்ரவரி மாதம் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகைகள் மிருணாள் தாகூர் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

சிம்புவின் 49வது படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக கூறப்பட்டாலும், அது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.