Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi Mohan : ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த ஹெல்த் டிப்ஸ் இதோ!

Actor Ravi Mohans Health Tips : தமிழில் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வருபவர் ரவி மோகன். ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தற்போது முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரவி எப்பொழுதும் இளமையாக இருப்பதற்குக் கொடுத்த ஹெல்த் டிப்ஸ் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Ravi Mohan : ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த ஹெல்த் டிப்ஸ் இதோ!
நடிகர் ரவி மோகன்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 21 Apr 2025 17:26 PM

தமிழ் சினிமாவில்  ரசிகர்களின் விருப்பமான ஹீரோவாக கலக்கி வருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் கடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னணி நாயகனாகப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இவருக்குப் பெண் ரசிகைகள் (Female fans) அதிகம். இவர் தற்போதுவரை திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாகக் காதலிக்க நேரமில்லை  (Kadhalikka Neramillai) என்ற படமானது வெளியாகியது. இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. நடிகர் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து சுமார் 22 ஆண்டுகள் கடந்துள்ளது. மேலும் தற்போது வரையிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகக் கலக்கி வருகிறார். நடிகர் ரவி மோகனுக்கும் தற்போது வயது 44 ஆகிறது. ஆனால் அவர் பார்ப்பதற்கு சுமார் 35 அல்லது 38 வயது நபர் போல இருந்து வருகிறார்.

இவரின் இளமையின் ரகசியத்தைப் பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும். அதைப் பற்றி நடிகர் ரவி மோகன் கூறியிருக்கிறார். அவர் இளமையாக இருப்பதற்கு வேறு எந்த மருந்துகளையும், உணவுகளையும் உட்கொள்வதில்லையாம். அவர் தினமும் காலையில் எழுந்து சுமார் 1 லிட்டர் தண்ணீரைக் குடிப்பாராம், மேலும் அவர் கூறியது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இளமையின் ரகசியம் பற்றி நடிகர் ரவி மோகன் கூறியது :

அவர் ஒரு நேர்காணலில்,”நான் எப்போதும் எனது உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்வேன், அதிகாலையில் எழுந்தவுடன் தினமும், சுமார் 1 லிட்டர் தண்ணீரைக் குடிப்பேன். அதுதான் என்னையும், எனது உடலையும் மிகவும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கிறது. இது ஒரு ஹெல்த் சீக்ரெட்டா என்று தெரியவில்லை. நான் காலையில் எழுந்தது முதல்  இரவில் தூங்கப்போகும் வரை நிறையத் தண்ணீர் குடிப்பேன். மேலும் எனது அம்மா மற்றும் அப்பா செய்த புண்ணியமா என்று தெரியவில்லை. இன்றுவரை நான் இளமையாக இருப்பதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரவி மோகனின் புதிய படங்கள் :

நடிகர் ரவி மோகன் காதலிக்க நேரமில்லை என்ற படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் தனி ஒருவன் 2 மற்றும் ஜீனி போன்ற படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ரவி மோகன் தனது முன்னணி நடிப்பில் மட்டும் 4 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றாக 2025 மற்றும் 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?...
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?
போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்த போப் யார்?...
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!...
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?...
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...