உண்மையான கராத்தே பாபு இவரா? அமைச்சர் பெயரை சொல்லி நடிகர் ரவி மோகன் சொன்ன கலகல சம்பவம்!
Ravi Mohan about Who is Karathey Babu: நடிகர் ரவி மோகன் தற்போது அரசியல்வாதியாக கராத்தே பாபு படத்தில் நடித்துள்ள நிலையில் உண்மையான கராத்தே பாபு இவர் தான் என்று அமைச்சர் பெயரை சொல்லி கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் படு பிசியாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் ரவி மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்குரா இயக்கி வருகிறார். இவர்களுடன் நடிகர் அதர்வாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதனை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் ஜீனி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் எழுதி இயக்கியுள்ளார்.
காமெடி ஃபேண்டசி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வமிகா காப்பி, தேவயானி, ஆஜித் காலிக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளர். இந்தப் படம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக நடிகர் ரவி மோகன் கராத்தே பாபு என்ற படத்திலும் நடித்து வருகிறார். அரசியல்வாதியாக ரவி மோகன் நடித்து வரும் இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இதில் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.
கராத்தே பாபு படம் குறித்த ரவி மோகனின் பதிவு:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது கராத்தே பாபு படம் குறித்தும், அந்த உண்மையான கராத்தே பாபு யார் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “எல்லாருக்கும் என்ன ஜெயம் ரவியாதான் தெரியும். ஆனா எனக்கு இன்னொரு பெயர் இருக்கு அது ரவி மோகன் என்று கலகலப்பாக தனது பேச்சைத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி பேர் எனது நண்பர்கள் அன்பு ரசிகர்களால் எனக்கு கிடைத்த பெயர். ஆனால் இப்போது ரவி மோகனா உங்க முன்னாடி நிக்கிறேன் என்று கராத்தே பாபு பட டீசரில் பேசியிருப்பேன். அந்த டீசர பாத்துட்டு எனக்கு ஒரு போன் வந்துச்சு. அது நம்ம மாண்புமிகு சேகர் பாபு சார் தான்.
எனக்கும் வந்துச்சு. என் படத்தோட இயக்குநருக்கு போன் வந்துச்சு. இயக்குநரும் பயந்துட்டே போனாரு டீசரை பார்த்துட்டு எதாவது சொல்லுவாரா என்று. அப்போ இயக்குநர்கிட்ட என்னப்பா கராத்தே பாபுனு எதோ படம் எடுக்குறீங்களா நம்மள மாதிரியே இருக்குனு சேகர் பாபு கேட்டாரு. சார் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல சார்னு இயக்குநர் சொல்லியிருக்கார்.
ஆனா சேகர் பாபு தம்பி நான் தான்பா அந்த கராத்தே பாபு என்று நகைச்சுவையாக கூறி அந்த படத்திற்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார்” என்று நடிகர் ரவி மோகன் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.