தனுஷின் செயலால் நெகிழ்ந்த ராஜ்கிரண்… பவர்பாண்டி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
Actor Rajkiran Talks About Dhanush: நடிகர் தனுஷ் தனது 52-வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இட்லி கடை என்று பெயர் வைத்துள்ளனர். முன்னதாக இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனதால் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

தனுஷ், ராஜ்கிரண், ரேவதி
நடிகர் தனுஷ் (Dhanush) இயக்குநராக அறிமுகம் ஆன பவர் பாண்டி படத்தின் போது தனுஷ் உடன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் (Rajkiran) வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவான இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) தான். கடந்த 2002-ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது ஒல்லியான உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று பல கேலிகளுக்கு ஆளான ஒருவர் ஹாலிவுட் வரை பிரபலமானது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இரண்டாவதே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் தனுஷை தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகராக பதியவைத்தது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் வெற்றி மாறன் உடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு கூட்டணிகளும் தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் காதல் என்பது எந்த வயதிலும் மாறாது என்பதை அழகாக காட்டியிருப்பார்கள்.
இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி உடன் இணைந்து தன்ஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் என பலர் நடித்துள்ளனர். தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிய படத்தில் நடித்தவர் ராஜ் கிரண். தனது தந்தையின் சினிமா வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததை நினைவில் வைத்து ராஜ் கிரணை முதலில் இயக்க வேண்டும் என்று தனுஷ் நினைத்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பவர் பாண்டி படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து நடிகர் ராஜ் கிரண் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் ராஜ் கிரண். அதன்படி ஷூட்டிங்கிள் யாராவது தன்னை சாதாரணமாக உரசிவிட்டு சென்றாலும் தனுஷிற்கு படுகோவம் வரும். எப்படி ஐயாவ இப்படி ஒரசிட்டு போற என்று தனுஷ் அவர்களிடம் கடிந்து கொள்வார் என்று ராஜ் கிரண் நெகிழ்ச்சியாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.