Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்.. விமானத்தில் ரசிகர்களுடன் எளிமையாகப் பயணித்த ரஜினிகாந்த்!

Rajinikanth Travelled In Economy Class On A Flight :கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் எக்னாமி வகுப்பில் சாதாரணமாக மக்களிடம் பயணம் செய்துள்ளார்.

Rajinikanth : ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்.. விமானத்தில் ரசிகர்களுடன் எளிமையாகப் பயணித்த ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த்
barath-murugan
Barath Murugan | Published: 26 Apr 2025 18:56 PM

கடந்த 2024 ஆண்டு வெளியான வேட்டையன் (Vettaiyan) படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie)  திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமானது. ஜெயிலர் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபகாலமாகக் கோவை மாவட்டத்தில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்குச் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் பயணம் (Traveling by plane) செய்துள்ளார்.

அதுவும் சாதாரண நபர்களைப் போல இண்டிகோ விமானத்தில் எக்கனாமி வகுப்பில் ரசிகர்களுடன் பயணம் செய்துள்ளார். அவரின் படங்களுக்குத் திரையரங்குகளில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ அதே அளவுக்கு விமானத்தில் ரசிகர்கள் தலைவா எனக் கூச்சலிட்டு சூப்பர் ஸ்டாரை வரவேற்றுள்ளனர். இது குறித்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைரல் வீடியோ :

இந்த வீடியோவில், ரசிகர்கள் விமானத்தின் உள்ளே தலைவா என்று கூச்சலிடுகின்றனர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த்தும் எந்தவித கர்வமும் இல்லாமல் கையசைத்துப் புன்னகைத்தார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எந்தவித கர்வமும் இல்லாமல், சாதாரண மக்களுடன் விமானத்தில் எக்கனாமி வகுப்பில் பயணம் செய்துள்ளார்.

ஜெயிலர் 2 ஷூட்டிங் :

ஜெயிலர் 2 ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெயிலர் 1 படத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் மேலும் இவர்களுடன் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் 1 படத்தை ஒப்பிடும்போது, ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறதாம். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், ரஜினியின் கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !
இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !...
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!
அமெரிக்க மாணவர்களுக்கு Gemini Advanced இலவசம்!...
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!...
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?...
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!...
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!...
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!...
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!...
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!...
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!...
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!...