Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : மீண்டும் அந்த இயக்குநருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்? இணையத்தில் வெளியான அப்டேட் இதோ!

Actor Rajinikanth New Movie : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக படங்களில் நடித்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல இயக்குநர் ஒருவருடன் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இயக்குநர் வேறு யாரும் இல்லை, கார்த்திக் சுப்புராஜ் என்று கூறப்படுகிறது.

Rajinikanth : மீண்டும் அந்த இயக்குநருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்? இணையத்தில் வெளியான அப்டேட் இதோ!
நடிகர் ரஜினிகாந்த்Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Published: 17 Apr 2025 21:02 PM

நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படங்கள் கூலி (Coolie) மற்றும் ஜெயிலர் 2 (Jailer 2). இதில் கூலி திரைப்படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கிய நிலையில், கடந்த 2025, மார்ச் மாதத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்தாக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கி வருகிறார். இவர்கள் இருவரின் காமினேஷனில் கடந்த 2023ம் ஆண்டில் ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. தமிழ் சினிமாவில் மிகவும் அதிகம் வசூல் செய்த படங்களில் இதும் ஒன்றாக இருந்தது. தற்போது அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்துதான் ஜெயிலர் 2 உருவாகி வருகிறது.

இந்த படத்தின் பாகம் 1ல் நடித்த அதே நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj)  இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார் என்ற தகவலானது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த செய்து தினத்தந்தி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் கூலி படம் :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முன்னணி இயக்கத்தில் தற்போது ரெட்ரோ இடமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தைத் தொடர்ந்துதான் ரஜினியுடன் புதிய படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 திரைப்படம் :

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பமான நிலையில், தற்போது கோவையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரு இசையமைத்து வருகிறார். மேலும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்னிங்க்கை தொடர்ந்துதான், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் படத்தின் இணைவார் என்று கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் – ரஜினிகாந்த் கூட்டணி :

இந்த கூட்டணியில் ஏற்கனவே பேட்ட என்ற படமானது வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படமானது சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?...
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி..
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி.....
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!...
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்...
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!...
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!...