“ஜெயலலிதாவை நான் எதிர்த்துப் பேச இதுவும் ஒரு காரணம்” – ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்

Actor Rajinikanth About Jayalalithaa: முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரைக் குறித்து ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் என்ற ஆவணப் படத்தை எடுத்துள்ளனர். இந்த ஆவணப் படத்தின் முன்னோட்ட காட்சி இன்று வெளியிடப்பட்டது. அந்த முன்னோட்ட காட்சியில் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பகிந்துகொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

ஜெயலலிதாவை நான் எதிர்த்துப் பேச இதுவும் ஒரு காரணம் - ஓப்பனாக பேசிய ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Updated On: 

09 Apr 2025 13:30 PM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை (Jayalalitha) தான் எதித்துப் பேச இதுவும் ஒரு காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வெளிப்படையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக தான் குரல் கொடுத்ததற்கு என்ன காரணம் உள்ளது என்பது குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் என்ற இந்த டாக்குமெண்டரியில் அவர பத்தி நான் பேசுறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு வந்து ரொம்ப நெருக்கமா, என் மீது அன்பு காட்டியவங்க ஒரு மூனு நாளு பேர் இருக்காங்க. அதில வந்து பாலசந்தர் சார், சோ சார், பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வி சார் (R.M. Veerappan) இவங்க எல்லாம் இல்லனு சொல்லும் போது…. ரொம்ப மிஸ் பன்றேன்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் ஆர்.எம்.வி-யும் மேடையில தயாரிப்பாளரா இருந்தாரு. அந்த நிகழ்வில் வெடிகுண்டு கலாச்சாராம் பற்றி நான் பேசினேன். அமைச்சர வைத்துகொண்டு அந்த விழாவில் அப்படி பேசியிருக்க கூடாது என்ற தெளிவு எனக்கு அப்போ இல்லை. அதப் பத்தி பேசிட்டேன்.

நடிகர் ரஜினிகாந்த பேசிய வீடியோ:

அத பத்தி நான் பேசியபோது அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். அடுத்த நாள் புரட்சி தலைவி ஜெயலலிதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியில் இருந்தே தூக்கிட்டாங்க. எப்படி நீங்க அந்த மேடையில இருக்கும் போது ரஜினி வெடிகுண்டு கலாச்சாரம் பத்தி பேசினா நீங்க சும்மா இருக்கமுடியும் அப்படினு சொல்லி ஆர்.எம்.வி-யை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிட்டாங்க.

அத தெரிஞ்ச உடனே அப்படியே எனக்கு வந்து ஆடிப்போச்சு. என்னடா இது என்னால தான் இப்படி ஆகிடுச்சுனு சொல்லி எனக்கு நைட் எல்லாம் தூக்கமே வரல. போன் பன்னா நைட் யாரும் போன் எடுக்கல. காலையில ஆர்.எம்.வி போன் எடுத்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். என்னால தான் இப்படி ஆகிடுச்சுனு சொன்னேன்.

அதுக்கு அவரு ஒன்னுமே நடக்காத மாதிரி அய்யய அதெல்லாம் நீங்க விடுங்க பதவி தான அதப்பத்திலாம் நீங்க மனசுல வச்சுக்க வேண்டாம். ஹேப்பியா இருங்க அப்பரம் என்ன என்ன ஷூட்டிங் போயிட்டு இருக்குனு சர்வ சாதாரணமாக ஆர்.எம்.வி என்கிட்ட பேசினார். எனக்கு வந்து அந்த தழும்பு எப்பவுமே போகாதுங்க.

ஏன்னா நான் தான் கடைசில பேசுனது. நான் கடைசியா பேசுன அப்பறம் எப்படி அவரால மைக்க பிடிச்சு பேச முடியும். அதனால மதிப்பிற்குரிய சி.எம். ஜெயலலிதாவிற்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தால் கூட இந்த காரணம் ரொம்ப முக்கியமானது. அதுகப்பறம் நான் ஜெயலலிதாகிட்ட பேசுறதா ஆர்.எம்.வி-யிடம் கூறினேன்.

ஆனால் அவர்.. அய்யயோ அதெல்லாம் வேண்டாம். அந்த அம்மா முடிவு எடுத்தா மாத்திக்க மாட்டாங்க. நீங்க பேசி உங்க மரியாதையை நீங்க இழக்க வேண்டாம். அப்படி நீங்க சொல்லி நான் அங்க போய் சேரவேண்டிய அவசியம் இல்ல நீங்க விட்டுடுங்கனு சொன்னார். அந்த மாதிரி ஒரு பெரிய மனிதர்.. கிங் மேக்கர்.. ரியல் கிங் மேக்கர் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.