Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்தின் ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட வீடியோ!
Love Insurance Kompany : நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தை தொடர்ந்து, நடித்துவந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்துடன், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது.

லவ் இசுரன்ஸ் கம்பெனி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகை நயன்தாராவின் கணவராகவும் இருந்து வருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் தற்போது மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடித்து வந்தார். இவரின் நடிப்பில் உருவாகும் 3வது திரைப்படமாகும் இது. இந்த படத்தில் பிரபல டோலிவுட் நடிகை கிருத்தி ஷெட்டி ( Krithi Shetty) முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த படமானது முற்றிலும் எதிர்காலத்தை பற்றி கூறும் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த படத்துக்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து ஏற்கனவே தீமா தீமா என்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படமானது சமீபகாலமாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவைத் தொடர்ந்து இப்படத்தின் புது புது அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட வீடியோ :
It’s a shoot wrap for #LIK !!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ✨#LoveInsuranceKompany #LIK
#VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav@PraveenRaja_Off @SonyMusicSouth @Rowdy_Pictures… pic.twitter.com/0hqY70ODBI
— Seven Screen Studio (@7screenstudio) April 14, 2025
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 3வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான சீமான் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு, கௌரி ஜி.கிஷன், ஆனந்தராஜ், சுனில் ரோட்டரி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வந்தனர். இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் பி.ஆர்.04 திரைப்படம் :
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் பிஆர்.04 என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க, புஷ்பா படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025, மார்ச் இறுதியில் தொடங்கியது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.