ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் – எப்போது தெரியுமா?

Baahubali Re-Release: பாகுபலி படத்தின் தயாரிப்பாளர்கள் இறுதியாக இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் தலைசிறந்த படைப்பை ரீ ரிலீஸ் செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, படம் மீண்டும் அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?

பாகுபலி

Updated On: 

29 Apr 2025 14:08 PM

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தப் படம் பாகுபலி (Baahubali). இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது பாகுபலி. இந்தப் படத்தை தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலக அளவில் உள்ள ரசிகர்களின் கவனத்தைப் பெற தொடங்கியது. இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் (Prabhas) உடன் இணைந்து நடிகர்கள் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகம் 2015-ம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இரண்டாவது பாகத்திற்காகன சூப்பர் ட்விஸ்டை முதல் பாக இறுதியில் இயக்குநர் வைத்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது.

நேற்று ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று, தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டரைப் பகிர்ந்து கொண்டார். அதில் பாகுபலி படத்தின் ரீ ரிலீஸ் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவில், “இந்த சிறப்பு நாளில், இந்த ஆண்டு அக்டோபரில் பாகுபலி படத்தின் இந்திய மற்றும் சர்வதேச மறு வெளியீட்டைத் திட்டமிடுகிறோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது வெறும் மறுவெளியீடாக இருக்காது, இது எங்கள் அன்பான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும். ஏக்கம், புதிய வெளிப்பாடுகள் மற்றும் வழியில் சில காவிய ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம். காத்திருங்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி எழுதி இயக்கி இருந்தார். அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் ஷோபு யார்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராணா டகுபதி வில்லனாகவும், அனுஷ்கா தந்தை பிரபாஸிற்கு ஜோடியாகவும், தமன்னா பாட்டியா மகன் பிரபாஸிற்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாகவும், சத்யராஜ் கட்டப்பா கதாப்பாத்திரத்திலும் மற்றும் நாசர் ரம்யா கிருஷ்ணனின் கணவராக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூபாய் 600–650 கோடியுடன், 2015 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தெலுங்கு படமாக இது அமைந்தது.