Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வடிவேலுவிடம் கற்றுக்கொண்ட பாடம்… நடிகர் நாசர் சொன்ன தகவல்!

Actor Nassar about Actor Vadivelu: தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளாக இருக்கும் நாசர் தான் அறிமுகம் ஆனதில் இருந்து தற்போது வரை பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் தற்போது வரை நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் நாசரின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வடிவேலுவிடம் கற்றுக்கொண்ட பாடம்… நடிகர் நாசர் சொன்ன தகவல்!
நடிகர் நாசர்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Apr 2025 12:22 PM

நடிகர் நாசர் (Actor Nassar) வடிவேலுவிடம் (Vadivelu) இருந்து நடிப்பதில் தான் கற்றுக்கொண்ட விசயம் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அது தற்போது வைரலாகி வருகின்றது. இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் நாசர் நடிகராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக் என அந்த காலம் முதல் இந்த காலத்தில் உள்ள விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஆர்யா, கார்த்தி என பலருடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடி, குணசித்திரம் என பல கேரக்டரிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நடிகர் நாசர் நீங்காத இடம் பிடித்தார்.

இவரது நடிப்பில் முன்னதாக வெளியான குருதிப்புனல், தேவர் மகன், பம்பாய் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. கமல் ஹாசனின் தேவர் மகன் படத்திலும், குருதிப்புனல் படத்திலும் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார் நடிகர் நாசர். அரவிந்தசாமியின் தந்தையாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

அதே போல நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் காமெடி கதாப்பாத்திரதில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருப்பார். மின்சார கனவு படத்தில் இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் கண் தெரியாத பாடகராக நடித்து ரசிகர்களை கலங்க வைத்திருப்பார்.

நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் பன்முகத்தன்னை கொண்டவராக இருக்கிறார். நடிப்பது மட்டும் இன்றி திரைக்கதை, வசனம், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். சுமார் 50 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வரும் இவர் தற்போதும் நடித்து வருகிறார்.

தென்னிந்தியா முழுவதும் தேர்ந்த நடிகராகக் கொண்டாடப்படும் இவர் கோலிவுட் சினிமாவில் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். தொடர்ந்து இவரது படங்கள் மூலம் செய்திகளில் இடம்பெறும் இவர் நடகர் சங்க செயல்பாடுகளின் மூலமும் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் காமெடி சென்ஸ் குறித்து நடிகர் நாசர் முன்பு ஒரு பேட்டியில் மிகவும் பிரம்மிப்பாக பேசியுள்ளார். அந்த வீடியோவில் எப்படி இந்த காமெடி எல்லாம் இவ்வளவு சூப்பரா பன்றீங்க என்று நாசர் வடிவேலுவிடம் கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு சொன்ன பதில் நாசரை பிரம்மிக்க வைத்துள்ளது.

அப்போது வடிவேலு “அண்ணே நாமா பன்ற காமெடி டைரக்டருக்கு புடிக்கனும் மக்களுக்கு புடிக்கனும்னு பன்ன கூடாது. முதல்ல நமக்கு பிடிக்கனு அந்த காமெடி. அப்படி ஒரு வேலை செய்தால் தான் மத்தவங்களுக்கு பிடிக்கும்” என்று வடிவேலு பேசியது நாசரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வடிவேலு  போன்ற ஒரு முன்னணி காமெடி நடிகர் தனது நடிப்பிற்காக மெனக்கெடும் விசயத்தை தன்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதாகவும் தானும் அந்த விசயத்தை கற்றுக்கொண்டதாகவும் நடிகர் நாசர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?
8ல் 6 தோல்விகள்! சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா..?...
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!...
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?...
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?...
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி...