நஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Alappuzha Gymkhana X Review: இயக்குநர் காலித் ரஹ்மானின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆலப்புழா ஜிம்கானா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான தள்ளுமாலா படம் தென்னிந்திய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

ஆலப்புழா ஜிம்கானா

Updated On: 

10 Apr 2025 18:20 PM

இயக்குநர் காலித் ரஹ்மானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான ஆலப்புழா ஜிம்கானா (Alapuzha Gymkhana) ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான பிரேமலு (Premalu) படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் நஸ்லேன் (Naslen) இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் அனகா ரவி, சந்தீப் பிரதீப், கணபதி, ரெடின் கிங்ஸ்லி, லுக்மான் ஆவரன், பேபி ஜீன், ஷிவா ஹரிஹரன், பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி காலையில் இருந்தே எக்ஸ் தள பக்கத்தில் பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தின் தனித்தும். இஞர்களின் உணர்வைப் வெளிப்படையாக காட்டியது முதல் நடிகர் நஸ்லேனின் நடிப்பு வரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.