Nani : ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்!
Nanis Hit 3 Movie Cameo Suspense : தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் நானி. இவரின் முன்னணி நடிப்பில் டோலிவுட் சினிமாவில் உருவாகியுள்ள படம் ஹிட் 3. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு நடிகர் நானி சொன்ன பதில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

டோலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகர்களின் வரிசையில் இருந்தது வருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் இறுதியாக சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram) என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் அந்தப் படம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்ததாக தயாராகியுள்ள படம் ஹிட் 3 (Hit 3). ஹிட் மூன்றாவது வழக்கு என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குநர் சைலேஷ் கொளனு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது ஹிட் வழக்கு என்ற தொகுப்பில் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இதன் 2 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து ஹிட் 3 படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்துள்ளார்.
இவர் கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்துப் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழில் விக்ரமின் கோப்ரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நானியின் இந்த ஹிட் 3 படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்தடுத்த நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.
நானி வெளியிட்ட பதிவு :
This one we couldn’t give the visuals out so will come with a specially shot video song.
What makes it even more special is that it’s sung by our favourite @anirudhofficial
Thank you ani for adding your magic to #Thanu 🤗
A @MickeyJMeyer musical ✨
Tomorrow pic.twitter.com/e3hzwEjWeB— Nani (@NameisNani) April 24, 2025
இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நானி, நடிகர் கார்த்தி இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு, சிரித்துக்கொண்டே எனக்கும் அந்த வதந்திகள் குறித்து தெரியவந்தது, எனக்கு கார்த்தி நடித்துள்ளாரா என்று உண்மையிலே தெரியாது என்று அவர் கூறியுள்ளார். அவர் பேசியதை முழுமையாகப் பார்க்கலாம்.
கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு நானி கொடுத்த ஸ்மார்ட் பதில்:
சமீபத்தில் தமிழ் நேர்காணலில் கலந்துகொண்ட நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தொகுப்பாளர், கார்த்தி சார், இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் நானி “நானும் இந்த வதந்திகளைக் கேட்டுத்தான் வருகிறேன், கார்த்தி இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்று எனக்குத் தெரியாது. நான் உண்மையிலே கூறுகிறேன் கார்த்தி நடித்துள்ளாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வேறு இரு நடிகர்கள் நடித்துள்ளனர் என்று எனக்குத் தெரியும். அதில் எந்த நடிகர் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று எனக்குத் தெரியாது என்று நடிகர் நானியும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் சமாளித்திருந்தனர். தற்போது இவர்கள் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.