Hit 3 : நானியின் “ஹிட் 3” படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

Hit 3 Trailer Release Update : டோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திரைப்படங்களில் நடித்து வருபவர் நானி. இவரின் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் ஹிட் 3. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

Hit 3 : நானியின் ஹிட் 3 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

நானியின் ஹிட் 3

Published: 

13 Apr 2025 16:48 PM

நடிகர் நானியின் (Nani) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஹிட் 3 (Hit 3) . இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சைலேஷ் கொளனு (Director Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது ஒரு தொகுப்பாக வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து 2 பாகங்கள் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகமான ஹிட் 3 படமானது உருவாகியுள்ளது. இயக்குநர் சைலேஷ் கொளனு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நானிக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty)  நடித்துள்ளார். இந்த படமானது ஒரு குற்றம் தொடர்பான விசாரணை குறித்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் 2 வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் நானியின் ஹிட் 3 படத்தின் ட்ரெய்லர் நாளை 2025, ஏப்ரல் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் காலை 11:07 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகர் நானி வெளியிட்ட பதிவு :

நானியின் இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில்தான் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த இரு படங்களுக்கு இடையேயும் போட்டி நிலவும் என்பது உறுதிதான்.

இந்த ஹிட் 3 திரைப்படத்தை இயக்குநர் சைலேஷ் கொளனு இயக்க, வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தின் தயாரிப்பில் நடிகர் நானியும் முக்கியபங்கற்றியுள்ளார். நடிகர் நானியின் இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் ஸ்ரீநிதி ஷெட்டி, ராவ் ரமேஷ் , பிரம்மஜி, மகந்தி ஸ்ரீநாத் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் கோலிவுட் நாயகன் கார்த்தியும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹிட் 4 படத்தில் கார்த்தி முக்கிய தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படமானது கண்டிப்பாக பாக்ஸ் ஆபிசில் பெரும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் நானி தி பாரடைஸ் என்ற படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.