Actor Nani : பிரம்மாண்ட படத்தின் சாதனையை முறியடித்த நானியின் ‘ஹிட் 3’ படம்.. ராஜமௌலியின் அந்த படத்தையா?

Actor Nani HIT 3 Movie : தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்துவருபவர் நானி. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஹிட் 3. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தின் ட்ரெய்லர் பார்வைகளைக் கடந்தது சாதனை படைத்துள்ளது. இந்த தகவல் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Actor Nani : பிரம்மாண்ட படத்தின் சாதனையை முறியடித்த நானியின் ஹிட் 3 படம்.. ராஜமௌலியின் அந்த படத்தையா?

நடிகர் நானி மற்றும் இயக்குநர் ராஜமௌலி

Published: 

16 Apr 2025 21:46 PM

டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி (Nani) . இவரின் நடிப்பிலும் தயாரிப்பிலும்  வெளியாகவிருக்கும் படம் ஹிட் தி கேஸ் (Hit the case). இந்த படத்தின் தொகுப்பில் இருந்தது தற்போது மூன்றாவது பாகம், ஹிட் 3  (HIT 3). இந்த படமானது முற்றிலும் அதிரடி காட்சிகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சைலேஷ் கொலானு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். இந்த படத்தை வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நடிகர் நானியும் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த 2024, ஏப்ரல் 14ம் தேதியில் இணையதளங்களில் வெளியாகியது. நடிகர் நானியின் அசுரத்தனமான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது.

இந்த படமானது சிறப்பான சாதனை ஒன்றைச் செய்துள்ளது. அது என்னவென்றால் இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர். ஆர்.ஆர். படத்தின் ட்ரெய்லர் பார்வைகளின் சாதனையை ஹிட் 3 படம் முறியடித்துள்ளது. இந்த தகவலானது தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இது குறித்தன தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் நானியின் ஹிட் 3 படத்தின் ட்ரெய்லர் பதிவு :

தெலுங்கு நடிகர் நானியின் ஹிட் 3 படத்தின் ட்ரெய்லரானது வெளியாகி 24 மணி நேரத்தில், சுமார் 21.31 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இயக்குநர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் ட்ரெய்லர் வெளியாகி வெறும் 20. 45 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நானியின் ஹிட் 3 படமானது இந்த சாதனையை முறியடித்த நிலையில், ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இந்தியாவில் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படமானது முதல் இடத்தில் இருக்கிறது. இந்த படமானது முதல் நாளில் சுமார் 44.67 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட் 3 படம் :

நடிகர் நானியின் இந்த படைத்ததை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். பிரம்மாண்ட கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பலரையும் கவர்ந்தது. ஹிட் 3 படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸின்போது தமிழில், சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.